உங்களுடைய ஹெல்த் இன்ஷுரன்ஸ்ஐ வைத்து கொரோனா நோய்த்தொற்றுக்கு க்ளைம் பண்ண முடியுமா???

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

 

கொரோனா பரவல் நேரத்தில் புதிதாக அதற்கு என்று பாலிசி எடுக்கலாமா? அல்லது ஏற்கனவே இருக்கும் பாலிசிக்களை இதற்கு பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தையும் ஒரு சிலர் எழுப்புகின்றனர். இந்நிலையில் எல்லா வகையான ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசிக்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு க்ளையம் செய்ய முடியும். கொரோனாவுக்கு எனத் தனியாக இன்ஷுரன்ஸ் பாலிசிக்களை எடுக்க தேவையில்லை. ஒருவேளை இதற்கு முன்பு எந்த பாலிசிக்களும் இல்லாமல் இருந்தால் கொரோனா பாலிசிக்களை எடுக்கலாம் என நிபுணர்கள் ஆலோசனைக் கூறுகின்றனர்.

அண்மையில் SBI ஜெனரல் இன்ஷுரன்ஸ் நிறுவனம் ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷுரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் உள்ளடக்கத் தொகை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை இருக்கிறது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (IRDAI) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட காப்பீட்டு அளவுகள் மற்றும் குறைந்த பிரீமியத் தொகை ஆகியவற்றோடு இணைந்த ஒன்றாக இது வடிவமைக்கப் பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாக ஏற்படும் மருத்துவச் செலவினங்களையும் இந்த பாலிசி மூலம் க்ளையம் செய்து கொள்ளலாம். இந்த ஆரோக்ய சஞ்சீவனி ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசியை இந்தியாவிலுள்ள 28 ஹெல்த் இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தி இருக்கின்றன. அதனால் உள்ளடக்கத் தொகையைப் பொறுத்து எந்த நிறுவனத்தில் வேண்டுமானாலும் பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ஹெல்த் பாலிசிகள் இருக்கிறது என்றால் புதிதாக பாலிசி எதையும் எடுக்கத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

கொரோனா நேரத்தில் டிராவல் பாலிசிக்களை பயன்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுப்பப் படுகிறது. ஒருவேளை ஊரடங்கு பிறப்பிக்காத முன்னால், அரசாங்கத்தின் அறிவுப்பு வராத நிலையில் விமான டிக்கெட்டுகளை எடுத்து இருந்தால் டிராவல் பாலிசிக்களை க்ளைம் செய்ய முடியும். அதுவும் பாலிசி எடுத்து இருக்கும் நிறுவனங்களைப் பொறுத்தே விதிமுறைகள் அமையும் எனவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

More News

செலவுகளைக் குறைப்பது எப்படி??? ஒரு எளிமையான வழிமுறை!!!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அத்யாவசியமானது எது, அத்யாவசியமற்றது எது என்பதை தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். கொரோனா நேரத்தில் இதை ஓரளவிற்கு நம்மால் புரிந்து கொள்ளவும் முடிந்தது.

தமிழகத்தில் 2வது நாளாக 1000ஐ தாண்டிய கொரோனா! சென்னையில் எத்தனை பேர்?

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள

திட்டமிட்டபடி காட்மேன் தொடர் வெளியாகுமா? ஜீ நிறுவனம் அதிரடி அறிவிப்பு

இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயப்பிரகாஷ் நடிப்பில் உருவான 'காட்மேன்' வெப்தொடர் வரும் 12ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறதா? பள்ளிகல்வி​த்துறை இயக்குநரின் அதிரடி உத்தரவு

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பாடகி சுசித்ராவின் அடுத்த வீடியோ: இணையதளங்களில் வைரல்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ரா 'சுசுலீக்ஸ்' என்ற பெயரில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒருசில சர்ச்சைக்குரிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு