மாஸ்க் போட்டா மூச்சு முட்டும்… பக்கவிளைவு? அசட்டுத்தனமான கேள்விகளுக்கு அறிவியல் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா நேரத்தில் உயிர்காக்கும் கவசமாக மாஸ்க் செயல்படுகிறது என உலகச் சுகாதார மையம் முதற்கொண்டு மருத்துவர்கள் வரை அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்படி இருக்கும்போது மாஸ்க்கை மூக்குக் கீழ் இறக்கி, வாய்க்குக் கீழ் இறக்கி போட்டுக் கொண்டு அலைபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் படு மோசமாக பரவி வருகிறது. இந்தச் சூழலிலும் மாஸ்க் குறித்து சில எதிர்மறைக் கருத்துக்கள் உலவுகின்றன. இதுபோன்ற சில அசட்டுத்தனமாக கேள்விகளுக்கு மருத்துவர்கள் விடையளித்து உள்ளனர்.
மாஸ்க் போட்டால் மூச்சு முட்டும்- 95 மாஸ்க் சிலருக்கு சுவாசக் கோளாறை ஏற்படுத்தலாம். ஆனால் எல்லா பொதுமக்களையும் 95 மாஸ்க்குத்தான் போட வேண்டும் என எந்த மருத்துவர்களும் வலியுறுத்துவதில்லை. அதேபோல துணியால் செய்யப்பட்ட மாஸ்க்குகளை மருத்துவர்கள் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.
கொரோனா போன்ற பெருந்தொற்று காலத்தில் 3 லேயர்கள் அடங்கிய அறுவைச் சிகிச்சை மாஸ்க்கைத்தான் மருத்துவர்கள் அதிகம் நம்புகின்றனர். இந்த மாஸ்க்கின் வெளிப்புறம் non-woven fabric ஆல் உருவாக்கப்பட்டு இருக்கும். இதனால் கொரோனா வைரஸ் அடங்கிய நீர்த் திவலைகளை (water resistant) இது எளிதாக உட்கிரகித்துக் கொள்ளும். அடுத்து நடுப்புறம் mely blown cloth ஆல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால் வெளியே இருந்து வரும் பாக்டீரியா, வைரஸ் போன்றவை அடங்கிய நீர் திவலைகளை இந்த நடுப்புறம் தடுத்து நிறுத்துகிறது (Fliter layer).
மாஸ்க்கின் உட்புறம் Comfort non woven layer ஆல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது fabric layer ஆக மூச்சு விடுவதற்கு ஏற்ற வகையில் மென்மையாகத்தான் இருக்கும். இதனால் அறுவைச் சிகிச்சை மாஸ்க் அணியும்போது மூச்சு முட்டும் எனக் கூறுவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.
கார்பன்டை ஆக்சைடு- மாஸ்க் போடும்போது உடலில் கார்பன்டை ஆக்சைடு அதிகளவு அதிகரித்து விடும் என்ற மருத்துவக் காரணத்தையும் சிலர் கூறுகின்றனர். மாஸ்க் போடும்போது கார்பன்டை ஆக்சைடு உடலில் அதிகரிக்கும் என்பது உண்மைதான். ஆனால் 100% முழுவதும் கார்பன்டை ஆக்சைடு மட்டுமே உடலில் இருக்கிறது எனக் கூறவதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாஸ்க் போட்டால் மீண்டும் மீண்டும் கொரோனா வைரஸ் வெளியே செல்லாமல் உடலுக்குள்ளேயே சென்று தங்குகிறது. இதனால் வெளியே போவதற்கு வழியே இல்லை என்றுகூட சிலர் மடத்தனமான காரணங்களைக் கூறிவருகின்றனர். மாஸ்க் என்பது இருவழி பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தும் ஒன்று. அதாவது மாஸ்க் போட்டால் நமக்கும் கொரோனா வராது. நம்மிடம் இருந்தும் கொரோனா மற்றவர்களுக்கு பரவாது. எனவே இந்தக் கூற்றிலும் உண்மை இல்லை.
மாஸ்க் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துகிறது என்பதற்கு எந்த ஆதாரம் இல்லை என்றுகூட சிலர் கூறி வருகின்றனர். கொரோனா போன்ற பெருந்தொற்று நோய்கள் பொதுவா நீர்த்திவலைகள் மூலமே பரவுகிறது. இதை மாஸ்க் கட்டுப்படுத்துகிறது என்ற உண்மையை கடந்த ஆண்டு ஹாங்காங்கில் ஒரு பரிசோதனை மூலம் மருத்துவர்கள் நிரூபித்து உள்ளனர். அதாவது கொரோனா நோய்த்தொற்றின் முதல் அலை பரவியபோது ஹாங்காக்கின் முக்கிய நகரம் ஒன்றில் ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்க் அணிந்து கொண்டு கூட்டமாகச் சென்றனர்.
இப்படி சென்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களில் வெறும் 5 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த கருத்துகளை The Lancet Public research Journal மே, 2020 இல் வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸில் மட்டுமல்ல கடந்த 1918 ஆம் ஆண்டு இன்ப்ளூயன்ஸா பரவியபோதும் மாஸ்க் பயன்பாடு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டு நேர்மறை முடிவு வெளியாகி இருக்கிறது. இதனால் மாஸ்க் என்பது கொரோனா வைரஸ் அடங்கிய நீர்த் திவலைகளை முழுவதும் உட்கிரகித்து அதை மனிதனுக்குப் பரவாமல் தடுக்கும் ஒரு உயிர்க்கவசம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் மாஸ்க் அணிந்து இருப்பவர்களைவிடவும் அணியாமல் இருப்பவர்களால் எவ்வளவு பரவுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு அறுவை சிகிச்சை போன்ற மாஸ்க்குகளை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout