மீண்டும் தல-தளபதி படங்கள் மோதுகிறதா?

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

கடந்த 2014ஆம் ஆண்டு தல அஜித் நடித்த 'வீரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ஆறு வருடங்களுக்கு பின் அடுத்த ஆண்டு மீண்டும் தல, தளபதி படங்கள் ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

அஜித்தின் அடுத்த படமான 'தல 60' திரைப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதேபோல் தளபதி விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் படமும் 2020 கோடை விடுமுறையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்ப்புத்தாண்டு தினத்தில் தல, தளபதி படங்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இருப்பினும் இரண்டு படங்களின் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தபின்னரே தல-தளபதி மோதல் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட! கவின் - லாஸ்லியா உரையாடல்

பிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது

விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கதறி அழுத மகன் பிரபாகரன்

கேப்டன் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருடைய இல்லத்திற்கு நேற்று ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'தல 60' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவரது அடுத்த படமான 'தல 60' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: தங்கம் வென்ற பிவி சிந்துவுக்கு கமல் வாழ்த்து

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாறு சாதனையை நிகழ்த்தியுள்ள இந்திய வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில்

கவினை டார்கெட் செய்யும் ஹவுஸ்மேட்ஸ்: கூட்டணியில் பிளவா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக கவின் தலைமையில் ஒரு ஜாலியான கூட்டணி இயங்கி வந்தது. இந்த கூட்டணி பிரச்சனை என்று வரும்போது ஒரே குரலில் பேசியதால் எதிர்த்தரப்புக்கு இக்கட்டான நிலையும் ஏற்பட்டது