முட்டையை செங்குத்தாக நிறுத்த முடியுமா??? இதுல கின்னஸ் சாதனையே பண்ணலாம்- இளைஞர் சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தத் தலைப்பை பார்த்தவுடன் எப்படிங்க முட்டையை செங்குத்தா நிறுத்த முடியும் என்ற சந்தேகம் தான் வரும். ஆனால் கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் ஒரு முட்டையை மட்டுமல்ல 3 மூட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். மேலும் இந்தச் சாதனையை அவர் வெறுமனே ஐந்து வினாடிகளில் செய்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்.
முகமது முக்பெல் கின்னஸ் நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் இந்தப் போட்டிக்கு பல்வேறு நிபந்தனை விதித்து இருக்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று முட்டை புதியதாக இருக்க வேண்டும். அடுத்து 3 முட்டைகளை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் காட்ட வேண்டும். அடுத்து இந்த வேலையை 5 வினாடிகளில் முடித்து விட வேண்டும். அனைத்து நிபந்தனைகளையும் ஏற்று இந்த இளைஞர் தற்போது வெற்றிகரமாக கின்னஸ் சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்து விட்டார். மேலும் பொறுமை, விடாமுயற்சி, மன ஒருமைப்பாடு இருந்தால் இது சாத்தியம் எனவும் அந்த இளைஞர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout