தனித்து நின்றால் ஓபிஎஸ் ஜெயிக்க முடியுமா? சி.ஆர்.சரஸ்வதி

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

நேற்று இரவு முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மெளனமாக உட்கார்ந்து கொண்டிருந்தபோது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த சி.ஆர்.சரஸ்வதி, 'கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் அம்மாவின் நினைவிடத்தில் தியானம் செய்வதாக கூறினார்.

ஆனால் ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பில் சசிகலாவுக்கு எதிரான கருத்தை கூறிய அடுத்த நிமிடமே, ஓபிஎஸ் அவர்களை சரமாரியாக சி.ஆர்.சரஸ்வதி திட்ட ஆரம்பித்துவிட்டார்.

மேலும் அதிமுக என்ற கட்சி இல்லாமல், இரட்டை இலை என்ற சின்னம் இல்லாமல் ஓபிஎஸ்-ஆல் வெற்றி பெற முடியுமா? என்று சி.ஆர்.சரஸ்வதி சவால் விட்டார்.

சி.ஆர்.சரஸ்வதியின் அர்த்தமில்லாத சவாலும், அவருடைய நிமிடத்திற்கு நிமிடம் மாறும் கருத்துக்களும் நெட்டிஸன்களுக்கு கிடைத்த அல்வா போன்று உள்ளதாக கருதப்படுகிறது.

More News

ஓபிஎஸ் பேட்டிக்கு ஆதரவு கொடுத்த பிரபலங்கள் யார் யார்?

'சாது மிரண்டால் காடு தாங்காது' என்ற பழமொழிக்கேற்ப தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் சமாதி அருகே கொடுத்த பேட்டி தமிழக அரசியல் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநாளாக அமைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் அவர் கலைத்த மெளனம் புயலாக மாறி தமிழக அரசியல் வட்டாரங்களை சுழன்றடித்து வருகிறது. இனிவரும் ஒருசில நாட்கள் Ī

தமிழக ஆளுனரின் சென்னை வருகை திடீர் ரத்தா?

தமிழக முதல்வராக இன்று அல்லது நாளை சசிகலா பொறுப்பேற்கும் வகையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர்  வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே ஆளுனரின் மும்பை நிகழ்ச்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டது...

மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்...

மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...