கொரோனா பரவல் நேரத்தில் உடலுறவு கொள்ளலாமா??? புதிய ஆய்வு என்ன சொல்கிறது???

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

 

கடந்த 2 மாதங்களாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக உலகமே முடங்கி இருந்தது. தற்போது, ஒரு சில நாடுகளில் மட்டும் இயல்பு நிலை திரும்பியிருக்கிறது என்றாலும் பெரும்பாலான நாடுகள் இன்னும் முடக்க நிலையில்தான் காணப்படுகிறது. ஒருபக்கம் கொரோனா பரவல் மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதத்திலிருந்து உலகம் முழுவதும் விற்கப்படும் ஆணுறைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதனால் கொரோனா பரவல் நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது சரியா என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் உட்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று “கொரோனா வைரஸ் பரவல் உடலுறவு மூலம் வெளிப்படுவதில்லை” எனக் குறிப்பிடுகிறது. 2 வாரங்களாக நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பின் இந்தப் பல்கலைக்கழகம் “உடலுறவு மூலம் கொரோனா வைரஸ் பரவாது” என்ற முடிவினை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு மாறாக இன்னொரு ஆய்வு முடிவும் தற்போது வெளியாகி இருக்கிறது. மத்திய சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 38 நோயாளிகளிடம் உடலுறவு கொள்வதன் வழியாக வைரஸ் பரவுகிறதா என்பதைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 6 நபர்களின் விந்துகளில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டப் பின்பு 31 நாட்கள் கழித்து சிலரது விந்துவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எனவே கொரோனா வைரஸ் உடலுறவு மூலம், அதாவது விந்து மூலமாக பரவ வாய்ப்பிருக்கிறதா என்பதைக் குறித்து தெளிவுப் படுத்த விரிவான ஆய்வுகள் தேவை எனத் தற்போது விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை மனிதர்களை பாதித்த எந்த ஒரு வைரஸ் நோயும் விந்து மூலமாக பரவும் எனக் கூறுவதற்கு போதுமான ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞான உலகம் பொதுவாகக் கூறிவருகிறது. இதற்கு மாறாக எபோலா, எய்ட்ஸ், ஜிகா, ஃப்ளூ போன்ற நோய் பரவலின் போது 27 பிற வைரஸ்களும் விந்துகளில் இருந்து வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சீனால் நடத்தப்பட்ட ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஜேம்ஸ் எம்ஹோடலிங் “கொரோனா சிகிச்சையில் இருந்த 4 நபர்களின் விந்துவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் சில நோயாளிகளுக்கு நோய் தாக்கிய சில வாரங்களுக்குப் பின்பும் அவர்களது உடலில் கொரோனா வைரஸ் சிறிய அளவில் தங்கியிருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இதுபோன்ற இக்கட்டான சூழலில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதைப்போலவே அமெரிக்காவின் நோய்த்தொற்று நிபுணரான “ஹண்டர் ஹோண்ட்ஸ்பீல்ட் “இதுபோன்ற அவசர காலங்களில் தேவையற்ற சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கொரோனா பரவல் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர் திரவம் மூலம் பரவுகிறது. நீர் திரவத்தைத் தவிர்த்து உடலுறவில் ஈடுபடுவதும் சாத்தியமில்லை. எனவே பாதுகாப்பான முறைகளை கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடலுறவு மேற்கொள்வதைத் தவிர்க்குமாறும் தற்போது சில விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இந்த ஆண்டு டிசம்பர் 6 வரை கொரோனா ஊரடங்கினால் பிறக்கும் குழந்தகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என . ஐ.நா. சபையின் யுனிசெப் நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இந்தக் கணிப்பின்படி இந்தியாவில் மட்டும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சமாக அதிகரிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. சீனாவில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 கோடியே 35 லட்சமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

More News

தனி வார்டில் வசதியில்லை: புகார் கூறிய 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் வசதி செய்து கொடுத்த முதல்வர்

கொரோனா வார்டில் வசதியில்லை என புகார் அளித்த 24 மணி நேரத்தில் 3 ஸ்டார் ஹோட்டலில் உள்ள வசதி செய்து கொடுத்த முதல்வர் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

ரஜினியால் இவரை எச்சரிக்கை செய்ய முடியுமா? ரவிகுமார் எம்பி கேள்வி

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வந்தன

மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்த பிரபல தமிழ் ஹீரோ!

கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

'விண்ணை தாண்டி வருவாயோ 2' டீசரை வெளியிட்ட கெளதம் மேனன்?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. கார்த்திக், ஜெஸ்ஸி என்ற இரண்டு கேரக்டர்களை

சென்னையில் மட்டுமே 500க்கும் மேல்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக