கொரோனா தடுப்பூசியால் மலட்டுத் தன்மை வருமா? மத்தியஅரசு அதிரடி விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ்க்கு எதிரான ஒரே ஆயுதமாகக் கொரோனா தடுப்பூசி மட்டுமே கருதப்படுகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் 6 மாதங்களைக் கடந்த பின்பும் தடுப்பூசி குறித்து ஒரு சில எதிர்மறையான கருத்துகள் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
அப்படியான ஒரு கருத்துதான் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்ளும்போது மலட்டுத் தன்மை வரும் என்பதும். இதுகுறித்து மத்திய அரசு ஜுன் 30 ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில், “கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆண்கள் – பெண்களுக்கு மலட்டுத் தன்மை வருமென்ற கூற்றுக்கு எந்தவித அறிவியல் ஆதாரமும் இல்லை. அனைத்துத் தடுப்பூசியும் அனைவருக்கும் பாதுகாப்பானது என்பதற்கு மட்டுமே அறிவியல் ஆதாரங்கள் உள்ளன. ஆகவே மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம்.
மேலும் அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதல் தரப்பட்டு இருக்கும் அனைத்துத் தடுப்பூசிகளும் முதலில் விலங்குகளுக்கும் பின் மனிதர்களுக்கும் செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. அனைத்திலும் தடுப்பூசி பாதுகாப்பானது என நிரூபிக்கப்பட்ட பின்னரே அவை சந்தைக்கு வந்தன. ஆகவே தடுப்பூசி பாதுகாப்பானதல்ல என்ற வதந்திகளை நம்பவேண்டாம்” எனத் தெரிவித்து உள்ளது.
மேலும் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை பணிக்குழுவின் தலைவர் அரோராவும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் போலியோ தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் பட்டபோதும் மக்களிடையே இதுபோன்ற தவறான கருத்துகள் இருந்து வந்தன. ஆனால் போலியோ சொட்டு மருந்து செய்ததெல்லாம் அந்த நோயை ஒழித்தது மட்டுமே.
அதேபோல கொரோனா தடுப்பூசியும் பல ஆய்வுகளுக்கு பின்னரே கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார். மேலும் இதில் மலட்டுத்தன்மை போன்ற பக்கவிளைவுகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com