கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா??? பீதியைக் கிளப்பும் புதுத் தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,July 08 2020]

 

கொரோனா வைரஸ் பரவும் தன்மை குறித்தும் அதன் மரபணு குறித்தும் புதுப்புது ஆய்வுத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மைக் கொண்டது என்ற ஆய்வறிக்கையை உலகம் முழுவதிலும் இருந்து 239 ஆய்வாளர்கள் வெளியிட்டு உள்ளனர். அந்த ஆய்வறிக்கையில் உண்மைத் தன்மை இருப்பதாகத் தற்போது உலகச் சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதும் இருமும்போதும் வெளியாகும் நீர்த்துளிகளில் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தன்மைக் கொண்டது என்ற தகவலை உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் கொரோனா வைரஸ் பொருட்களின் மீது எவ்வளவு நேரம் உயிர்வாழும்? பொருட்களில் மேல் தங்கியிருக்கும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க என்னென்ன பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு தகவல்களைத் தொடர்ந்து புத்துப்பித்துக் கொண்டே இருக்கிறது. இதுவரை உலகம் முழுவதும் உள்ள சுகாதார அமைப்புகள் எதுவும் காற்றில் கொரோனா வைரஸ் பரவும் தன்மைக் கொண்டது என்ற கருத்தினை வலியுறுத்தவில்லை.

முன்னதாக உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மைக் கொண்டது எனக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது 32 நாடுகளைச் சேர்ந்த 239 ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து ஒரு ஆய்வறிக்கை உலகச் சுகாதார அமைப்புக்கு அனுப்பி இருக்கின்றனர். அந்த ஆய்வறிக்கையில் கொரோனா வைரஸ் காற்றில் பரவி மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த ஆதாரத்தை ஏற்றுக்கொள்வதாக WHO தற்போது அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

நேற்று ஜெனிவாவில் நடைபெற்ற கொரோனா வைரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்நுட்பப் பிரிவின் தலைமை மருத்துவர் வான் கெர்வாவ் கூறும்போது “கொரோனா வைரஸ் மனிதர்கள் மூலம் மனிதர்களுக்கு ஒருவர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவும் என்று கூறியிருந்தோம். ஆனால், ஆய்வாளர்கள் காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் இருக்கிறது என்று ஆய்வறிக்கையை அளித்தனர். காற்றின் மூலம் கொரேனா வைரஸ் பரவுவதற்கான ஆதாரங்கள் இருப்பதை உலக சுகாதார அமைப்பு ஏற்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போது வெளிப்படும் நீர்த் துளிகளின் நுண்ணிய துகள்கள் காற்றில் பரவி இருக்கும் என்றும் அந்த நீர்த்துகள் காற்றில் பரவி அதன் மூலம் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற கருத்துக்கான ஆதாரங்களை தற்போது விஞ்ஞானிகள் வெளியிட்டு உள்ளனர். அந்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது உலகச் சுகாதார அமைப்பு காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்தை ஒப்புக் கொண்டு இருக்கிறது. மேலும் இதுகுறித்த ஆய்வுகள் தொடரப்படும் என்ற ஒப்புதலையும் வான் கெர்வாவ் அளித்து இருக்கிறார்.

More News

குழந்தைகள் விரும்பி உண்ணும் நூடுல்ஸ் உடலுக்கு நல்லதா??? நூடுல்ஸ் பிறந்த கதை!!!

உருவத்தில் நம்ம ஊரு இடியாப்பத்தைப் போலவே இருக்கும் நூடுல்ஸ் உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒரு உணவு வகையாக இருக்கிறது.

மேலும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில எம்எல்ஏக்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில்

நான் உயிருடன் தான் இருக்கின்றேன்: ஜன்னல் கடை பஜ்ஜி கடைக்காரரின் அதிர்ச்சி பேட்டி

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான ஜன்னல் கடை பஜ்ஜிக்கடை உரிமையாளர் கொரோனா தொற்றுக்கு  பலியானதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

பாக்யராஜ், சாந்தனு இணையும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு!

இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவரான கே பாக்யராஜின் மகன் சாந்தனு சமீபத்தில் தளபதி விஜய்யுடன் 'மாஸ்டர்' திரைப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே

நள்ளிரவில் கவர்ச்சி நடிகை வீட்டில் நடந்த சம்பவம்: சென்னையில் பரபரப்பு

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்கி என்பவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது