நாளைமுதல் பிரச்சாரம்...! கேப்டன் பராக்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டும் நிலையில், தேமுதிக தலைவர் கட்சி சார்பாக பிரச்சாரத்தை துவங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக, திமுக,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. தினகரனின் அமமுக கட்சியுடன், விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடாததால், கட்சியினர் மத்தியின் பெரும் கலக்கமே நிலவி வந்தது. கட்சியின் பொருளாளர் மற்றும் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் களம் இறங்குகிறார். தொகுதிகளுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.
இந்நிலையில் இத்தனை நாட்கள் உடல்நிலை காரணமாக, விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாளை(25 மார்ச்) முதல் அமமுக மற்றும் தேமுதிக சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரச்சாரத்தை துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இச்செய்தி அக்கட்சியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments