நாளைமுதல் பிரச்சாரம்...!  கேப்டன் பராக்...! 

  • IndiaGlitz, [Wednesday,March 24 2021]

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டும் நிலையில், தேமுதிக தலைவர் கட்சி சார்பாக பிரச்சாரத்தை துவங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், அதிமுக, திமுக,அமமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 5 கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. தினகரனின் அமமுக கட்சியுடன், விஜயகாந்த் அவர்களின் தேமுதிக கூட்டணி வைத்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஆனால் தேர்தலில் விஜயகாந்த் போட்டியிடாததால், கட்சியினர் மத்தியின் பெரும் கலக்கமே நிலவி வந்தது. கட்சியின் பொருளாளர் மற்றும் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விருத்தாச்சலம் தொகுதியில் களம் இறங்குகிறார். தொகுதிகளுக்குள் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் இத்தனை நாட்கள் உடல்நிலை காரணமாக, விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்தார். ஆனால் நாளை(25 மார்ச்) முதல் அமமுக மற்றும் தேமுதிக சார்பில் நிற்கும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக விஜயகாந்த் பிரச்சாரத்தை துவங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இச்செய்தி அக்கட்சியினர் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

'தளபதி 65' படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 65' திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே

அமெரிக்காவில் சரமாரி துப்பாக்கிச்சூடு… 10 பேர் பரிதாப பலி!

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலிலும் அமெரிக்காவில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

தேர்தல் துளிகள்: 24 மார்ச் 2021

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைக்கு உட்பட்ட இலுப்பூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஏவிஎம்: சூப்பர்ஹிட் இயக்குனர் அறிவிப்பு!

எம்ஜிஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து நான்கு தலைமுறைகளாக திரைப்படங்கள் தயாரித்து வரும் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காமல்

இந்தியாவில் 50 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது