மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார்.. பிரபல ஒளிப்பதிவாளரின் பதிவு.. நெட்டிசன்ஸ் ரியாக்சன் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,February 13 2024]

மன்னிக்கவும் ஆர்.என்.ரவி சார் என்று பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவரது பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

நேற்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க மறுத்ததை அடுத்து அவருக்கு பதிலாக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அவர்கள் வாசித்தார். அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனது உரையை நிகழ்த்திய கவர்னர் ரவி, ‘தமிழக அரசின் உரையில் உண்மை இல்லை என்பதால் தான் அந்த உரையை வாசிக்கவில்லை என்றும் கூறிவிட்டு ஜெய்ஹிந்த் என்ற முழக்கத்தோடு சட்டசபையில் இருந்து தேசிய கீதம் ஒலிக்கும் முன்னர் வெளியேறினார். கவர்னரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் பி.சி ஸ்ரீ ராம் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறுகையில் ’மன்னிக்க வேண்டும் ஆர்.என்.ரவி சார், உங்களது செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மட்டும் ஏன் ஆளுநர்கள் குழந்தைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

More News

வடபழனி முருகன் கோவிலில் திரைப்பட இயக்குனருக்கு திருமணம்.. மணமகள் எம்.இ.பட்டதாரி..!

தமிழ் திரைப்பட இயக்குனர் சென்னை வடபழனி முருகன் கோயிலில் எம்இ பட்டதாரி பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் திரையுலக பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரம்.. ஆபாச நடிகருடன் நடித்த பிரபல நடிகருக்கு கண்டனம்..!

பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து விளம்பரத்தில் ஆபாச நடிகருடன் இணைந்து பிரபல நடிகர் ஒருவர் நடித்துள்ள நிலையில்  அவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்திய அஜித்.. இருவருக்கும் இடையே இப்படி ஒரு நட்பா?

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சமீபத்தில் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கினார்.

தமிழகத்தின் முதல் பழங்குடியின பெண் நீதிபதி.. திருக்குறளை மேற்கோள்காட்டி வாழ்த்திய இசையமைப்பாளர்..!

தமிழகத்திலிருந்து முதல் முதலாக பழங்குடியின  பெண் ஒருவர் நீதிபதியாக தேர்வு பெற்றதை அடுத்து பிரபல இசையமைப்பாளர் தனது சமூக வலைதளத்தில் அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  

இதுவரை நடிக்காத கேரக்டர்.. நயன்தாராவின் 81வது படத்தை இயக்கவிருப்பது இவரா?

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்ற நயன்தாரா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது 'தி டெஸ்ட்' மற்றும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய