கேமிராவின் மொழியை புரிந்து கொண்டவர் நயன்தாரா: பிரபல ஒளிப்பதிவாளர் பாராட்டு

  • IndiaGlitz, [Saturday,August 25 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று வசூலை குவித்துள்ள நிலையில் வரும் 30ஆம் தேதி அவர் நடித்த மற்றொரு படமான 'இமைக்கா நொடிகள்' திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படமும் வசூலை குவித்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் அவர்கள் நயன்தாரா இந்த படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு குறித்து புகழ்ந்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். “நயன்தாரா வெறும் மேக்கப் போட்டுக்கொண்டு மட்டும் லென்ஸ் முன் நிற்கவில்லை. கேமராவின் மொழியைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப சரியாகத் தன்னை வெளிப்படுத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்” என ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் பாராட்டியுள்ளார்

கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' படத்தில் அறிமுகமான ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், ஏற்கனவே நயன்தாரா நடித்த 'கஜினி, 'மாஸ்', 'இருமுகன்' உள்பட பல வெற்றிப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

கீ.வீரமணியை மீண்டும் கிண்டல் செய்த அழகிரி மகன்

வீட்டில் இருப்பவர்கள் பற்றி கேளுங்கள், வெளியில் இருந்து விருந்து உண்ண வந்தவர்கள் பற்றி கேட்க வேண்டாம்" என்று பதிலளித்தார்.

மிஷ்கின் அடுத்த படத்தில் மணிரத்னம் பட நாயகி

விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்திற்கு பின்னர் மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ள

சொன்னபடியே தாளிச்ச கமல்: அப்பாவி மகத்துக்கு ஒரு குறும்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமமோ கடந்த சில மணி நேரங்களுக்கு முன்  வெளியான போது இன்று கண்டிப்பாக மகத் கோஷ்டியை தாளிச்சு எடுக்கவுள்ளதாக வாக்கு அளித்தார் கமல்

ஆடியன்ஸ் கொடுத்த அவசர மெனு: தாளிப்பாரா கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சுமார் 70 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் கடந்த சீசனில் பெற்ற வரவேற்பில் பாதி கூட இன்னும் பார்வையாளர்களிடம் இருந்து பெறவில்லை.

'விஸ்வாசம்' முதல் 'சர்கார்' வரை: டுவிட்டர் டிரெண்டில் தமிழ் சினிமா

பொதுவாக டுவிட்டர் டிரெண்டில் அரசியல் குறித்த செய்திகளே அதிகம் இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக டுவிட்டர் டிரெண்ட்களில் பெரும்பாலும் சினிமா சம்பந்தமான டிரெண்டுகளே அதிகம் உள்ளது.