49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம்.. ஷங்கர், மணிரத்னம் பட ஒளிப்பதிவாளர் ஆதங்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தன்னுடைய 49 வருடத்தில் இதுதான் மோசமான அனுபவம் என சென்னை விமான நிலையத்தில் தனக்கு நிகழ்ந்தது குறித்து பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கன்னத்தில் முத்தமிட்டால்’ ’ஆயுத எழுத்து ’ஷங்கரின் இயக்கத்தில் உருவான ’பாய்ஸ்’ மற்றும் துருவ் விக்ரம் அறிமுகமான ’ஆதித்யா வர்மா’ உட்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ரவி கே சந்திரன்.
இவர் சமீபத்தில் வெளியூர் சென்று விட்டு சென்னைக்கு திரும்பிய போது சென்னை விமான நிலையத்தில் அவரது உடமைகள் லக்கேஜ் பிரிவிலிருந்து வந்து சேர்வதற்கு நீண்ட நேரம் ஆனதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
என்னுடைய 49 வருட பயண அனுபவத்தில் இதுதான் மோசமான அனுபவம் என்றும் இது குறித்து யாரும் சரியாக பதில் அளிக்கவும் இல்லை என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து சில திரை உலக பிரபலங்கள் பதிவு செய்துள்ள நிலையில் தற்போது ரவி கே சந்திரனின் இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Chennai airport baggage handling service is ALWAYS by far the worst experience I have ever had in my 49 years of travelling . Baggage’s come late .. and no one ever around to answer @ChennaiAirport @ThaiAirways
— ravi k. chandran (@dop007) August 22, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments