close
Choose your channels

இயக்குனராக மாறும் பிரபல ஒளிப்பதிவாளர்

Friday, November 27, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்', லிங்கா உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ரத்னவேலு. ராண்டி என்று அழைக்கப்படும் இவர் சமீபத்தில் தெலுங்கு படமான குமாரி 21எப்' என்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.

இந்த படத்தின் கதை சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் வித்தியாசமாக இருந்ததால் மிகவும் ஆர்வத்துடன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேலு, இந்த படத்தை தமிழில் அவரே இயக்கி ஒளிப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளாராம்.

இதனால் கோலிவுட்டில் ராஜீவ் மேனன், தங்கர்பச்சான், கே.வி.ஆனந்த் வரிசையில் ரத்னவேலுவும் விரைவில் இயக்குனராக உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ராஜ்தருண், ஹீபாபட்டேல் நடித்த கேரக்டர்களுக்கு பொருத்தமான தமிழ் நடிகர், நடிகைகளை தேடி வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment