புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிசி ஸ்ரீராம் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக உயர் பதவிகளுக்கு சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் திறமையான நேர்மையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருவது அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்படுவது முதல் சமீபத்தில் மாநில கொள்கை குழுவில் துணை தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது வரை முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு பதவிகளுக்கு திறமையான நபர்களை தேர்வு செய்து முதல்வர் அவர்கள் நியமனம் செய்வது ஆரோக்கியமான போக்கு ஆகும். ஒரு வழியாக தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்’ என்று தெரிவித்துள்ளார். பிசி ஸ்ரீராம் அவர்களின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.
The way #CMMKStalin is going about in appointing people of caliber in various positions is a very healthy trend.
— pcsreeramISC (@pcsreeram) June 7, 2021
Atlast a breath of fresh air.
Thank u sir .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments