புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்: முதல்வர் ஸ்டாலினுக்கு பிசி ஸ்ரீராம் பாராட்டு!

தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குறிப்பாக உயர் பதவிகளுக்கு சர்ச்சைக்கு இடமில்லாத வகையில் திறமையான நேர்மையான அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருவது அனைவரும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்படுவது முதல் சமீபத்தில் மாநில கொள்கை குழுவில் துணை தலைவராக ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டது வரை முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் அவர்கள் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு பதவிகளுக்கு திறமையான நபர்களை தேர்வு செய்து முதல்வர் அவர்கள் நியமனம் செய்வது ஆரோக்கியமான போக்கு ஆகும். ஒரு வழியாக தமிழகத்தில் புதிய காற்று வீசுகிறது, நன்றி சார்’ என்று தெரிவித்துள்ளார். பிசி ஸ்ரீராம் அவர்களின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.
 

More News

0.3 மில்லி செகண்டில் காதலில் விழுந்தேன்: அன்புக்குரியவரை அறிமுகம் செய்த ராஷ்மிகா மந்தனா!

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் பிரபல நாயகி என்பதும் தற்போது அவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

'தி பேமிலி மேன்-2' தொடரை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா? அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்

சமந்தா, ப்ரியாமணி உள்பட பலர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'தி பேமிலி மேன்-2' என்ற வெப்தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு சில அரசியல்வாதிகள் இந்த

ஜெ. வழக்கின் முக்கிய அதிகாரி ஜி.சம்மந்தம் உயிரிழந்தார்....!

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சொத்துக்குவிப்பு வழக்க&#

எனது அடுத்த படத்தில் 'பயணம்' முக்கிய பங்கு வகிக்கும்: கிருத்திகா உதயநிதி

'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்

வாடகை ஆட்டோ, கார்களில் பயணிக்க இ-பதிவு... பெறுவது எப்படி?

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி வரை குறைந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டள்ளது.