பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு: டுவிட்டரில் மாதவன் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மாதவன் நடித்த இந்தி திரைப்படமான Rehnaa Hai Terre Dil Mein என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ஜானிலால். இவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது
கடந்த 2001ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் ’மின்னலே’. கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான இந்த படம் ஹிந்தியிலும் Rehnaa Hai Terre Dil Mein என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு கௌதம் மேனனே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தமிழில் நடித்த மாதவன் நடித்த கேரக்டரில் இந்தியிலும் அவரே நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜானிலால் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் மாதவன் Rehnaa Hai Terre Dil Mein என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜானிலால் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. நாங்கள் ஒரு அருமையான ஒளிப்பதிவாளரை இழந்துவிட்டோம். உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உங்களது எளிமை மற்றும் திறமை ஆகியவற்றை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம்
Rehnaa Hai Terre Dil Mein என்ற படத்திற்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி இருந்தீர்கள்> உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். உங்களது மறைவு எனது நெஞ்சத்தை பிளந்துள்ளது என்று பதிவு செய்துள்ளார்.
The Saga of tragedies continues & we lost a wonderful man-The DOP of RHTDM. RIP Johny Lal sir.Your gentleness,kindness and brilliance will be so missed. You so beautifully managed to bring out our souls in RHTDM & now yours makes its way to the heavens. Heartbroken and aghast.?? pic.twitter.com/301Jj59uMA
— Ranganathan Madhavan (@ActorMadhavan) April 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments