பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு: டுவிட்டரில் மாதவன் இரங்கல்!

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

நடிகர் மாதவன் நடித்த இந்தி திரைப்படமான Rehnaa Hai Terre Dil Mein என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ஜானிலால். இவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது

கடந்த 2001ஆம் ஆண்டு தமிழில் வெளியான திரைப்படம் ’மின்னலே’. கௌதம் மேனன் இயக்கிய முதல் திரைப்படமான இந்த படம் ஹிந்தியிலும் Rehnaa Hai Terre Dil Mein என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டு கௌதம் மேனனே இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தமிழில் நடித்த மாதவன் நடித்த கேரக்டரில் இந்தியிலும் அவரே நடித்து இருந்தார் என்பதும் இந்த படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ஜானிலால் என்பவர் சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட் திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் மாதவன் Rehnaa Hai Terre Dil Mein என்ற படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஜானிலால் அவர்களின் மறைவு மிகவும் அதிர்ச்சி அளித்துள்ளது. நாங்கள் ஒரு அருமையான ஒளிப்பதிவாளரை இழந்துவிட்டோம். உங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உங்களது எளிமை மற்றும் திறமை ஆகியவற்றை நாங்கள் ரொம்பவே மிஸ் செய்கிறோம்

Rehnaa Hai Terre Dil Mein என்ற படத்திற்கு மிக அருமையாக ஒளிப்பதிவு செய்து காட்சிகளுக்கு உயிரூட்டி இருந்தீர்கள்> உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். உங்களது மறைவு எனது நெஞ்சத்தை பிளந்துள்ளது என்று பதிவு செய்துள்ளார்.

More News

மாரடைப்பு வந்தால் உடனே என்ன செய்யனும்? ஆலோசனை வழங்கும் பிரத்யேக வீடியோ!

சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனது 59 ஆவது வயதில் உயிரிழந்தார்.

கவின் படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: ஆச்சரியமான அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் கவின் தற்போது 'லிப்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனாவால் பாதிப்படைந்த பெண் மருத்துவர்: இறக்க போவதை முன்கூட்டியே அறிவித்த அதிசயம்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் தான் இறக்கப் போவதை முன்கூட்டியே தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

விவேக் மறைவிற்கு மரம் வைத்து மரியாதை செய்த சிம்பு படக்குழுவினர்!

சமீபத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியது என்பது தெரிந்ததே

விவேக் கனவை நினைவாக்குவோம்...! கோவையில் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிவிப்பு...!

விவேக் அவர்களின் கனவை நனவாக்குவோம் என்று, கோவை திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பாக கூறப்பட்டுள்ளது.