இயக்குனராகும் ஒளிப்பதிவாளர் ஜீவா மகள்.. 'PS1' நடிகர் தான் நாயகன்.. நாயகி யார் தெரியுமா?
- IndiaGlitz, [Saturday,January 13 2024]
மறைந்த ஒளிப்பதிவாளர் மகள் இயக்குனராக அறிமுகமாக இருப்பதாகவும் அவரது இயக்கத்தில் உருவாகும் முதல் படத்தில் 'பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகர் நாயகன் ஆகவும் பிரபல நடிகை ஒருவர் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருந்த ஜீவா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காலமானார். இந்த நிலையில் அவருடைய மகள் சனா என்பவர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். ’பொன்னின் செல்வன்’ முதல் பாகத்தில் கூட அவர் பணிபுரிந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சனா இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் ’பொன்னின் செல்வன்’ திரைப்படத்தில் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்த சந்தோஷ் என்பவர் தான் நாயகனாக நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார்.
இந்த படத்தை சுந்தர் சி யின் அவ்னி சினி கிரியேஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.