ஜெராக்ஸ் கடையில் காதல் திருமணம் செய்த ஆராய்ச்சியாளர்கள்....! காரணம் என்ன..?
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் உள்ள காதல் ஜோடி வித்தியாசமான முறையில் தங்களுடைய திருமணத்தை நிகழ்வை நடத்தியுள்ளனர்.
அண்மையில் தலைநகர் டெல்லியில், பிதம்புரா- சி.எஸ்.சி. மார்க்கெட் பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில், மிக எளிமையான முறையில் ஒரு காதல் ஜோடி திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணம் குறித்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சார்ந்த அசியா இஸ்லாம், பாலின ஆராய்ச்சியாளராக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் தான், தன்னுடன் பணிபுரியும் சக ஆராய்ச்சியாளரை காதலித்து, மிக எளிமையான முறையில் திருமணம் செய்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் அசியா கூறியிருப்பதாவது," நான் ஆராய்ச்சியாளராக இருந்து செஃப்பாக மாறியுள்ள என் காதலரை திருமணம் செய்துள்ளேன். பிரெட், பீர் மற்றும் சீஸ்கேக் போன்ற உணவுகளை தயாரிப்பது அவருக்கு பிடிக்கும். தன்னடக்கமாக அவர் இருப்பார், இது ஆய்வாளர்களுக்கே உண்டான சுபாவம்தான். எங்களுக்குள் ரோமேன்ஸ் வராது. அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் ஜெராக்ஸ் கடையில் திருமணம் செய்து கொண்டோம். அடுத்தகட்டத்துக்கு நகர்ந்த எங்கள் வாழ்க்கையை, இங்கே தான் கையெழுத்திட்டு துவங்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு டுவிட்டரில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Life update: I’ve married a researcher-turned-chef who makes excellent breads, beers & cheesecakes with an impostor syndrome to match that of academics.
— Asiya Islam (@asiyaislam) August 26, 2021
Fittingly for two people who proclaim themselves to be anti-romantic, our signing ceremony happened in a photocopy shop. pic.twitter.com/WMwAcdNaYZ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments