அந்த நைட்டியை நான் தான் வாங்கி கொடுத்தேன்: விஜே சித்ரா மரணம் குறித்து இயக்குனர்!

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்த போது சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையும் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் அவர் நைட்டியுடன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சித்ரா முதன்முதலாக நடித்த திரைப்படம் ’கால்ஸ்’. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆன நிலையில் அந்த படத்தின் இயக்குனர் சபரிஸ் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் சித்ரா தற்கொலை செய்து கொண்ட போது அணிந்திருந்த நைட்டி நான் தான் என்னுடைய படத்திற்காக வாங்கி கொடுத்தேன் என்றும் அந்த நைட்டியின் பிங்க் கலர் அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி நான் வாங்கினேன் என்றும் ஆனால் அதே நைட்டியில்தான் அவர் இறந்து கிடந்தார் என்ற தகவலை நான் தொலைக்காட்சியில் பார்த்த போது அதிர்ச்சி அடைந்தேன் என்றும் இந்த செய்தியை முதன்முதலில் அறிந்ததும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும் சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர் என்றும் அவரிடம் சோர்வு என்பதே பார்க்க முடியாது என்றும் சாதாரணமாக இருப்பவர்கள் கூட அவர் அருகில் இருந்தால் கலகலப்பாக மாறி விடுவார்கள் என்றும் அந்த அளவுக்கு இருக்கும் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்ப முடியவில்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

More News

ஈகோவை விட்டு விட்டு ரஜினியுடன் ஒன்றுசேரத் தயார்: கமல் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனிக்கட்சி ஆரம்பித்து களமிறங்க உள்ளார். ஏற்கனவே கட்சியை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட கமல்ஹாசனும்

திருமதி ஹிட்லர்: ஜீடிவியில் அம்பிகா நடிக்கும் புதிய தொடர்!

ஜீ டிவியில் நேற்று முதல் 'திருமதி ஹிட்லர்' என்ற புதிய தொலைக்காட்சி தொடர் ஆரம்பமாகியுள்ளது. மாலை 6,30 மணி முதல் 7 மணி வரை ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடிகை அம்பிகா நடித்து வருகிறார்

தமிழ்நாட்டில் முதலீடு செய்பவர்களுக்கு அரசு முழு ஆதரவு… எடப்பாடி பழனிசாமி உறுதி!!!

கொரோனா காலத்தில் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக இருந்து வந்தது. இதனால் கொரோனா தாக்கத்தால் வீழ்ந்த பொருளாதாரத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஓடிடியில் மாதவனின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகள் திறந்தபோதிலும் போதுமான பார்வையாளர்கள் வரவில்லை

சித்ராவின் கடைசி நாள் படப்பிடிப்பு காட்சிகள் வீடியோ வைரல்!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதியில் நாசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி சின்னத்திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது