காலையில் அம்மா... இரவில்... ஸ்ரீரெட்டியை அடுத்து உண்மையை உடைக்கும் இன்னொரு நடிகை

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

கடந்த சில நாட்களாக டோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி ஏற்கனவே 'பாகுபலி புகழ் ராணாவின் சகோதரர் உள்பட பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்த ஸ்ரீரெட்டி அதில் தன்னை போல் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சில நடிகைகளை பேச வைத்தார். அதில் அம்மா, அத்தை வேடத்தில் நடித்து வரும் சந்தியாநாயுடு என்ற நடிகை கூறியபோது, 'காலையில் அம்மா என்று கூப்பிடும் இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் இரவு வந்துவிட்டால் படுக்கைக்கு அழைப்பார்கள் என்றும், அதிலும் ஒரு இயக்குனர் உள்ளாடை டிரான்ஸ்பேரண்டாக இருக்கின்றதா? என்று கேட்டதாகவும் கூறியுள்ளார்.

அதேபோல் சுனிதா ரெட்டி என்ற மற்றொரு நடிகை கூறியபோது, 'வெளிப்புற படப்பிடிப்பின்போது பெரிய நடிகர், நடிகைகள் கேரவேனில் உடைமாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எங்களை போல் துணை நடிகைகளை வெட்டவெளியிலே உடைமாற்ற கட்டாயப்படுத்துவார்கள் என்றும், எங்களை புழுவை விட கேவலமாக நடத்துவார்கள் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.