மது சிகரெட் போல் காபியிலும் எச்சரிக்கை வாசகங்கள்: நீதிமன்றம் உத்தரவு

  • IndiaGlitz, [Friday,March 30 2018]

இந்தியாவில் தயாராகும் மது மற்றும் சிகரெட் தயாரிப்புகளில் உடல் நலத்திற்கு தீங்கு என்னும் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல் காபி மற்றும் காபி தயாரிப்பு பொருட்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் இருக்க வேண்டும் என கலிபோர்னியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்த பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையின்போது காபி குடிப்பதால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதால் இதுகுறித்த விழிப்புணர்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்த எச்சரிக்கை வாசகங்கள் காபியில் இருக்க வேண்டியது அவசியம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இந்த வழக்கில் காபி குடிப்பதால் உடலுக்கு நன்மை என்றும், காபியில் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும் கெமிக்கல்கள் எதுவும் கலக்கப்படுவதில்லை என்றும் காபி உற்பத்தியாளர்களின் வாதத்தை நீதிபதி ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.