பெற்ற குழந்தைகளை பட்டினி போட்ட தம்பதிக்கு ஆயுள்தண்டனை

  • IndiaGlitz, [Saturday,April 20 2019]

அமெரிக்காவில் பெற்ற குழந்தைகளை பட்டினி போட்டு சித்ரவதை செய்த பெற்றோருக்கு ஆயுள்தண்டனை கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டேவிட் , லூயிசி தம்பதிக்கு 13 குழந்தைகள் இருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தையை தவிர மீதி 12 குழந்தைகளை ஒரு அறையில் பூட்டி, பட்டினி போட்டு சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதில் 17 வயது குழந்தை ஒருவர் தப்பி சென்று போலீசில் கொடுத்த புகார் காரணமாக டேவிட், லூசி கைது செய்யப்பட்டனர். விசாரணையின்போது தங்கள் குழந்தைகளை சித்ரவதை செய்ததை தம்பதிகள் ஒப்புக்கொண்ட நிலையில் அவர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது.

ஆனால் சித்ரவதைக்கு உள்ளான குழந்தைகளில் சிலர் தங்கள் பெற்றோர்களை தாங்கள் மன்னித்துவிட்டதாகவும், இப்போதும் அம்மா, அப்பாவை நேசிப்பதாகவும் நீதிமன்றத்தில் கூறியபோது, டேவிட், லூசி தம்பதியினர் நீதிமன்றத்திலேயே அழுதுவிட்டனர்.

தங்களுடைய குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்தது ஒழுக்கம் கற்பித்ததும் நல்ல நோக்கங்களுக்குத்தானே தவிர, குழந்தைகளை காயப்படுத்த வேண்டுமென இதனை செய்யவில்லை என்றும், இப்போதும் தாங்கள் குழந்தைகளை நேசிப்பதாகவும் எங்களது குழந்தைகளும் எங்களை நேசிப்பார்கள் என்று நம்புவதாகவும் தம்பதிகள் நீதிமன்றத்தில் கண்ணீருடன் கூறினர்.

More News

தலைமை ஆசிரியர் மீது பாலியல் புகார்... துடிக்கத் துடிக்க உயிருடன் எரித்துக் கொள்ளப்பட்ட19 வயது மாணவி!

பங்களாதேஷில் தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என போலீசில் புகார் கொடுத்த மாணவியை சிலர் துடிக்க, துடிக்க, உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் அதிகாரி திடீர் மாயம்: மேற்குவங்கத்தில் பரபரப்பு

மேற்குவங்க மாநிலத்தில் வரும் 29ஆம் தேதி நான்கவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ள நாடியா என்ற தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டு வந்த அர்னாப் ராய் என்பவர் திடீரென மாயமாகியுள்ளதால்

இயக்குனர் பா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோவாகும் கலையரசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'பிர்சா முண்டா' என்ற இந்தி படத்தை இயக்கி வருகிறார்.

அஞ்சலியின் 'லிசா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்தியாவின் முதல் ரியல்D 3D தொழில்நுட்பத்தில் தயாரான அஞ்சலியின் லிசா திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில்

அருள்நிதியின் 'K13' ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'Mr.லோக்கல் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1ல் இருந்து மே17க்கு மாற்றப்பட்டதால் மே 1ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது