யார் யாருக்கு எந்த துறை? மத்திய அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் பிரதமராக நேற்று நரேந்திரமோடி பதவியேற்றதை அடுத்து மொத்தம் 58 அமைச்சர்கள் அவருடன் பதவியேற்றனர். இவர்களில் 25 பேர் கேபினட் அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் 24 இணை அமைச்சர்கள் ஆகும். இந்த நிலையில் யார் யாருக்கு எந்த துறை என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது: இதில் ஒருசில முக்கிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை குறித்து தற்போது பார்ப்போம்.
அமித்ஷா: உள்துறை
நிர்மலா சீதாராமன்: நிதித்துறை
ராஜ்நாத் சிங்: பாதுகாப்புத்துறை
நிதின் கட்காரி: தரைவழி போக்குவரத்துத்துறை
பியூஷ் கோயல்: ரயில்வேதுறை
ஹர்ஷவர்தன்: சுகாதாரத்துறை
ஸ்மிருதி இரானி: பெண்கள் நலத்துறை மற்றும் ஜவுளி
சதானந்த கவுடா: ரசாயனம் மற்றும் உரத்துறை
ரமேஷ் போக்ரியால்: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
பிரகாஷ் ஜவடேகர்: மத்திய சுற்றுச்சூழல் துறை
ஜெய்சங்கர்: மத்திய வெளியுறவுத்துறை
ராம்விலாஸ் பாஸ்வான்: உணவுத்துறை
நரேந்திரசிங்: விவசாயம்
ரவிசங்கர் பிரசாத்: சட்டத்துறை
கிரண் ரிஜிஜூ: விளையாட்டுத்துறை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments