நடுவானில் உயிருக்குப் போராடிய நபர்… ஓடிவந்து காப்பாற்றிய அமைச்சர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு அதே விமானத்தில் பயணித்த மத்திய அமைச்சர் ஒருவர் முதல்உதவி செய்து காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீர் தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட அந்தப் பயணி, கடும் அவதியுற்றார். இதனால் விமானத்தில் யாரேனும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா? எனக் கேட்கப்பட்டது.
இதையடுத்து அதே விமானத்தில் பயணம் செய்த நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத், உடனே ஓடிவந்து பயணிக்கு முதல் உதவி செய்துள்ளார். மேலும் முதலுதவிப் பெட்டியில் இருந்த மருந்து ஊசியை நோயாளிக்கு செலுத்தி அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அடிப்படையில் மருத்துவரான நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷண்ராவ் காரத்தை தற்போது பிரதமர் மோடியும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து “மனதில் எப்போதும் நீங்கள் மருத்துவர்தான். என்னுடைய சக அமைச்சரின் செயலுக்குப் பாராட்டுகள்“ என்று பிரதமர் மோடி தனது டிவிட்டரில் பதிவிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout