டுவிட்டர் பிரபலத்திற்கு சமோசா அனுப்பி சமாதானம் செய்த பிரபல நிறுவனம்

  • IndiaGlitz, [Friday,October 27 2017]

சமூக வலைத்தளமான டுவிட்டரில் கப்பார்சிங் என்பவர் பிரபலம் என்பது டுவிட்டர் பயனாளிகள் பலருக்கு தெரிந்திருக்கும். இவருக்கு சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்று சமோசா அனுப்பி சமாதானம் செய்ததோடு வருத்தமும் தெரிவித்துள்ளது. 

கப்பார்சிங் சமீபத்தில் டெல்லி விமான நிலையில் செல்ல தனியார் கேப் நிறுவனம் ஒன்றில் கார் புக் செய்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கார் டிரைவர் வராமல் டிரைவரே அந்த டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார். கேப் நிறுவனத்தில் டிரிப் கேன்சல் செய்தால் புக் செய்தவர் அபராதம் செலுத்த வேண்டும். இதன்படி கப்பார் சிங் இடம் அந்த கேப் நிறுவனம் அபராதத்தை வசூலித்துவிட்டது. டிரைவர் செய்த தவறுக்கு நான் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று பொங்கிய கப்பார்சிங் உடனே இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அவர் தனது டுவிட்டில், 'இது எப்படி இருக்கிறது தெரியுமா? கடைக்காரரிடம் சமோசா கேட்டு அவர் சமோசா இல்லை என்று கூறியதற்காக நாம் பத்து ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போல் உள்ளது' என்று டுவிட்டியிருந்தார். 

கப்பார்சிங் டுவிட்டரில் பிரபலம் என்றதால் அவருடைய டுவீட் வைரலானது. இதனால் அந்த கேப் நிறுவனத்திற்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. உடனே கப்பார் சிங்கிடம் வருத்தம் தெரிவித்ததோடு, அவருடைய முகவரிக்கு இரண்டு சமோசாவை அனுப்பி அவரை சமாதானம் செய்தது. அந்த சமோசா புகைப்படத்தையும் கப்பார்சிங் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.

More News

தமிழக அரசுக்கு ஜி.வி.பிரகாஷ் நன்றி

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் மொழிக்கு இருக்கை கிடைப்பது தமிழக அரசின் முயற்சியால் கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதை அடுத்து இந்த இருக்கைக்காக கடந்த சில மாதங்களாக முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராகிய ஜி.வி.பிரகாஷ்

ஹார்வர்டு பல்கலையில் தமிழ் இருக்கை: நனவாகிறது தமிழர்களின் கனவு

உலகில் உள்ள ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் முயற்சித்து வருவது

தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து உருவான புதிய யூனியன்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக நடிகர் விஷால் பொறுப்பேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கமல் மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு: போலீசார் அவசர ஆலோசனை

டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்த ஒரு டுவீட், பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து தேவராஜன் என்பவர் வழக்கு தொடரந்தார்

மெர்சல் சென்சாருக்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத வகையில் ரிலீசுக்கு முன்பு மட்டுமின்றி ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகள் மலைபோல் குவிந்தது.