டுவிட்டர் பிரபலத்திற்கு சமோசா அனுப்பி சமாதானம் செய்த பிரபல நிறுவனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமூக வலைத்தளமான டுவிட்டரில் கப்பார்சிங் என்பவர் பிரபலம் என்பது டுவிட்டர் பயனாளிகள் பலருக்கு தெரிந்திருக்கும். இவருக்கு சமீபத்தில் தனியார் கேப் நிறுவனம் ஒன்று சமோசா அனுப்பி சமாதானம் செய்ததோடு வருத்தமும் தெரிவித்துள்ளது.
கப்பார்சிங் சமீபத்தில் டெல்லி விமான நிலையில் செல்ல தனியார் கேப் நிறுவனம் ஒன்றில் கார் புக் செய்திருந்தார். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் கார் டிரைவர் வராமல் டிரைவரே அந்த டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார். கேப் நிறுவனத்தில் டிரிப் கேன்சல் செய்தால் புக் செய்தவர் அபராதம் செலுத்த வேண்டும். இதன்படி கப்பார் சிங் இடம் அந்த கேப் நிறுவனம் அபராதத்தை வசூலித்துவிட்டது. டிரைவர் செய்த தவறுக்கு நான் ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என்று பொங்கிய கப்பார்சிங் உடனே இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அவர் தனது டுவிட்டில், 'இது எப்படி இருக்கிறது தெரியுமா? கடைக்காரரிடம் சமோசா கேட்டு அவர் சமோசா இல்லை என்று கூறியதற்காக நாம் பத்து ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்பது போல் உள்ளது' என்று டுவிட்டியிருந்தார்.
கப்பார்சிங் டுவிட்டரில் பிரபலம் என்றதால் அவருடைய டுவீட் வைரலானது. இதனால் அந்த கேப் நிறுவனத்திற்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. உடனே கப்பார் சிங்கிடம் வருத்தம் தெரிவித்ததோடு, அவருடைய முகவரிக்கு இரண்டு சமோசாவை அனுப்பி அவரை சமாதானம் செய்தது. அந்த சமோசா புகைப்படத்தையும் கப்பார்சிங் தனது டுவிட்டரில் பதிவு செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout