சூர்யாவின் 'சி3' படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சி3' திரைப்படம் வரும் 26ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிங்கம், சிங்கம் 2 வெற்றி படங்களை அடுத்து மூன்றாம் பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் சென்சாரில் ஏற்கனவே 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ள நிலையில் தற்போது தமிழக அரசின் 30% வரிவிலக்கையும் பெற்றுள்ளது. இந்த செய்தி விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளருக்கு தித்திக்கும் செய்தியாக உள்ளது. தமிழக அரசின் வரிவிலக்கு இந்த படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதப்படுகிறது.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
. @Suriya_offl 's #Si3 gets ET exemption in TN.. pic.twitter.com/CJZlctLBf1
— Ramesh Bala (@rameshlaus) January 20, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com