சி.வி.குமாரின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,September 11 2016]

அட்டக்கத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த சி.வி.குமார் சமீபத்தில் இயக்குனராக மாறி 'மாயவன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'அதே கண்கள்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1967ஆம் ஆண்டு ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் 'அதே கண்கள்' என்ற டைட்டிலில் ஒரு படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது மீண்டும் அதே டைட்டிலில் ஒரு திரைப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'மெட்ராஸ்' கலையரசன், ஜனனி ஐயர், ஷிவேதா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இஅக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவும், லியோ ஜான்பால் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். சி.வி.குமாரின் மற்ற திரைப்படங்கள் போலவே இந்த படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் அவர் மிக அரிதாகவே ஒருசில கருத்துக்களை பதிவு செய்வார் என்பது தெரிந்ததே.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு இளையதளபதி வாழ்த்து

கடந்த மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற சிந்துவுக்கும், வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக் அவர்களுக்கும் முதல் ஆளாக வாழ்த்து சொன்னவர் நமது இளையதளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.

கேத்ரினா தெரசாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

'கபாலி' இயக்குனரின் முந்தைய படமான 'மெட்ராஸ்' படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

விக்ரம்பிரபுவின் 'வீரசிவாஜி' சென்சார் தகவல்கள்

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வாஹா' திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாத நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள இன்னொரு படமான 'வீரசிவாஜி' ரிலீசுக்கு தயாராக உள்ளது.

சூர்யா-35 படத்தில் இணைந்த இரண்டு பிரபல நட்சத்திரங்கள்

சூர்யா தற்போது நடித்து வரும் 'சிங்கம் 3' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள்...