புதிய டிஜிபி சைலேந்திரபாபு: அதிகாரபூர்வ் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

தமிழக காவல்துறையின் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தமிழக டிஜிபி திரிபாதி அவர்கள் நாளையுடன் ஓய்வு பெறுவதை அடுத்து புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் காவல்துறையில் சட்டம்- ஒழுங்கு டிஜிபி பதவி என்பது தீயணைப்புத் துறை, சிபிசிஐடி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம், சிறைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை என பல டிஜிபிக்கள் பதவியில் இருந்தாலும் அனைத்திற்கும் தலையாயப் பதவி என்பதும், இதை ஹெட் ஆஃப் தி போலீஸ் ஃபோர்ஸ் (HOPF) என்றும் அழைக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு காவல்துறையின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சைலேந்திரபாபு என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபி சைலேந்திரபாபு தமிழ்நாடு காவல்துறையின் 1987 ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். தற்போது ரயில்வே டிஜிபியாக பதவியில் இருக்கும் சைலேந்திரபாபு அவர்கள் இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபி சைலேந்திரபாபு நாளை பகல் 12 மணி அளவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.