மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கலையே.. அதே நாளில் ரிலீசான படத்தின் இயக்குநர் ஆதங்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாளத் திரைப்படமான ’மஞ்சுமெல் பாய்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படம் இதுவரை 90 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாகவும் விரைவில் 100 கோடி என்ற மைல்கல்லை எட்டும் என்றும் கூறப்படுகிறது.
தமிழில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த கமல்ஹாசனின் ’குணா’ படத்தின் சில காட்சிகள் மற்றும் ‘கண்மணி அன்போட’ என்ற பாடல் வருவதால் தான் இந்த படம் தமிழகத்தில் டிரெண்ட் ஆனது என்றும் தமிழில் டப்பிங் செய்யாமலே இந்த படத்திற்கு குடும்ப ஆடியன்ஸ்கள் குவிந்து வருகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ’மஞ்சுமெல் பாய்ஸ்’ வெளியான அதே தினத்தில் வெளியான இன்னொரு திரைப்படம் தான் ’பைரி’. அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்து உள்ளானார்கள் என்பதும் புறா பந்தயத்தால் தனது மகனின் வாழ்க்கை நாசமாக கூடாது என்று நினைக்கும் அம்மா குறித்த கதையம்சம் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்திற்கு ஊடகங்களில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது என்பதும், சேரன் உட்பட பல இயக்குனர்கள் இந்த படத்தை பார்த்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த போதிலும் இந்த படம் 120 தியேட்டர்களில் வெளியாகி தற்போது வெறும் 14 தியேட்டர்களில் மட்டுமே ஓடி வருகிறது.
இதற்கு காரணம் ’மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதை அடுத்து தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டது என்றும் அந்த படத்திற்கு கொடுத்த ஆதரவை ரசிகர்கள் எனது படத்திற்கும் கொடுத்திருக்கலாம் என்றும் எனது படமும் நல்ல படம் தான் என்றும் இயக்குனர் ஜான் கிளாடி ஆதங்கத்துடன் பேட்டி அளித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments