விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் தமன்னா

  • IndiaGlitz, [Tuesday,January 31 2017]

'இருமுகன்' வெற்றிக்கு பின்னர் சீயான் விக்ரம் தற்போது கவுதம்மேனன் இயக்கத்தில் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் விக்ரமின் அடுத்த படத்தை 'வாலு' இயக்குனர் விஜய்சந்தர் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விக்ரம்-விஜய்சந்தர் இணையும் படத்தின் நாயகியாக சாய்பல்லவி நடிப்பார் என்று ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவல்களின்படி இந்த படத்தில் தமன்னா நாயகியாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உண்மையெனில் விக்ரமுடன் முதன்முறையாக ஜோடி சேரும் வாய்ப்பை பெறுகிறார் தமன்னா. தமன் இசையமைக்கும் இந்த படத்தை சில்வர்லைன் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

More News

ரஜினிதான் என் முதல் சாய்ஸ். மோகன்லால் இயக்குனர்

மோகன்லால்-மீனா நடித்த 'த்ரிஷ்யம்' படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மீண்டும் இதே ஜோடி நடித்த 'முன்திருவல்லிகள் தளிர்க்கும்போல்' என்ற மலையாள படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனர் ஜிபு ஜாக்கப் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்....

மணிரத்னம்-ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடும் 'அழகியே'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' திரைப்படம் வெகுவிரைவில் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவரவுள்ள நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி அதிகாலை 12.00 மணிக்கு வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்...

விஷ்ணு-ரஜினிக்கு கிடைத்த புதிய புரமோஷன்

'வெண்ணிலா கபடிக்குழு' முதல் 'மாவீரன் கிட்டு' வரை நல்ல தரமான படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கும் ரஜினிநட்ராஜ் என்பவருக்கும் கடந்த 2011ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் தற்போது இந்த தம்பதி புரமோஷன் பெற்றுள்ளனர்...

அஜித்தின் 'ஆலுமா டோலுமா' வின் அடுத்த சாதனை

அஜித் நடித்த 'வேதாளம்' திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து பாடிய 'ஆலுமா டோலுமா' என்ற பாடல் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மிகப்பெரிய ஹிட்டை பெற்றது. 'கொலைவெறி' பாடலுக்கு பின் இந்த பாடல் அனிருத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியது.

வங்கிக்கணக்கு-ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க உச்சவரம்பு இல்லை. ஆர்பிஐ

கடந்த நவம்பர் மாதம் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று மத்திய அரசு எடுத்த முடிவை அடுத்து, வங்கிக்கணக்கில் இருந்தும் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.