ஐபோன் வாங்க போறீங்களா? பண்டிகையில் செம ஆஃபர்!


இளைஞர் சிலருக்கு ஐபோன் வாங்குவதே தங்களின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் மீதான மோகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி பிரமிப்பை ஏற்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் தற்போது இந்தியாவில் பண்டிகை காலத்தை ஒட்டி சில ஆஃபரை அறிவித்து இருக்கிறது.

இந்தியாவில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றன. இதனால் அமேசான், பிளிஃப்கார்ட், மீஷோ போன்ற நிறுவனங்கள் தற்போது ஆஃபரை அறிவித்து இருக்கின்றன.

ஆப்பிள் ஆஃபர்கள்

இந்தியாவில் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 12 மினியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 ஜோடி ஏர்பாட்ஸ் இலவலகமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த மாடல் ஐபோனை ஆன்லைன் ஸ்டோரில் வாங்கினால் மட்டுமே இந்த ஆஃபர் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இந்த ஆஃபர் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஐபோன் 8 அல்லது வேறெந்த மாடல் ஐபோனை வாங்கினாலும் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.46 ஆயிரம் வரை தள்ளுபடியை பெற முடியும். மேலும் பண்டிகை காலத்தில் வாங்கும் ஐபோன்களை செக் அவுட்டின்போதே பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஐபோன்களுக்கு வழங்கப்படும் இலவச ஏர்பாட்ஸ்களோடு கம்பி சார்ஜிங் கேஸ்ஸும் இலவசமாக வழங்கப்படும்.

இதற்கு முன்பு மேக்புக், ஐமேக், ஐபேட் மாடல்களை வாங்குவோருக்கு மட்டுமே ஆப்பிள் நிறுவனம் ஏர்பாட்ஸை இலவசமாக வழங்கிவந்தது. தற்போது பழைய ஐபோன் 12, 12 மினி மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்தச் சலுகையைப் பெறமுடியும். இதைத்தவிர ஏர்பார்ட்ஸ்களில் ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஈமோஜிகள் அல்லது டெக்ஸ்ட் சேவைகளையும் பெறமுடியும்.