விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகள்: தவெகா புஸ்ஸி ஆனந்த் அறிக்கை..!

  • IndiaGlitz, [Friday,February 23 2024]

தமிழக வெற்றிக் கழகம் குறித்து விஷமத்தனமான செய்திகள் பரப்பப்படுகின்றன என்றும் அந்த செய்திகளை நம் கட்சியின் தொண்டர்கள் நம்ப வேண்டாம் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்

தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டம் மதுரையில் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் விஜய் தனது கட்சியின் கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவிப்பார் என்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. இந்த நிலையில் இது குறித்து புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காக சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன்.

கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

More News

லெஜண்ட் சரவணன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு எப்போது? அவரே வெளியிட்ட அறிவிப்பு..!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜெண்ட்' என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் அவருடைய அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது

மீண்டும் இணையும் ரூ.100 கோடி வசூல் பட கூட்டணி.. சிவகார்த்திகேயன் அடுத்த பட அப்டேட்..!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் அந்த படத்தின் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினேகன் விவகாரத்தில் சிறை சென்ற நடிகை.. இரண்டே நாளில் ஏற்பட்ட திருப்பம்..!

கவிஞர் சினேகன் நடத்தி வரும் சினேகம் பவுண்டேஷன் என்ற அமைப்பில் முறைகேடாக பண வசூல் செய்ததாக நடிகை ஜெயலட்சுமி மீது புகார் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார்

பிறந்தநாள் பார்ட்டியில் சன் டிவி சீரியல் நடிகை.. கிளாமர் புகைப்படங்கள்..!

சன் டிவி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை பிறந்தநாள் பார்ட்டிக்கு கிளாமர்  காஸ்ட்யூமில் சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

படப்பிடிப்பில் திடீரென படமெடுத்த நல்ல பாம்பு.. நடிகை பதிவு செய்த அதிர்ச்சி வீடியோ.!

தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் நடிகை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு நல்ல பாம்பு நுழைந்து படம் எடுத்ததாக கூறப்படுகிறது.