2026ல் விஜய் தான் முதல்வர்.. கருத்துக்கணிப்பில் 65% தவெக.. புஸ்ஸி ஆனந்த் ஆவேச பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தலைவர் விஜய் தான் 2026 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சர் என்றும் அவரை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைக்க நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட வேண்டும் என்றும் சமீபத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 65 சதவீதம் விஜய் தான் முதல்வராக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர் என்றும் புஸ்ஸி ஆனந்த் ஆவேசமாக பேசி உள்ளார்.
தளபதி விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அரசியல் பணிகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் பேசியபோது விஜய் மக்கள் இயக்கம் எப்படி செயல்பட்டதோ, அதேபோல் தமிழக வெற்றி கழகம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும், தங்கள் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தை வளர்க்க பாடுபட வேண்டும்.
2026 ஆம் ஆண்டு முதல்வர் யார் என்ற கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட நிலையில் அதில் 65 சதவீதம் விஜய் தான் முன்னிலையில் உள்ளார். நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்தால் கண்டிப்பாக 2026ல் விஜய்யை முதல்வர் நாற்காலியில் உட்கார வைக்கலாம்.
இன்னும் ஒரு சில நாட்களில் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை அதிகாரபூர்வமாக தலைவர் விஜய் அறிவிப்பார். இனிமேல் கட்சியின் முக்கிய அறிவிப்புகளை எல்லாம் அவர்தான் வெளியிடுவார். தேர்தல் நேரத்தில் மட்டுமின்றி தேர்தல் இல்லாத நேரத்திலும் நாம் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout