2 அரசியல் கட்சிகளுடன் விஜய்யை தொடர்புபடுத்தி செய்தி: புஸ்ஸி ஆனந்த் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இரண்டு அரசியல் கட்சிகளுடன் விஜய்யை தொடர்புபடுத்தி முன்னணி நாளிதழ் ஒன்றில் இன்று செய்தி வெளியாகியுள்ள நிலையில் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள இரண்டு அரசியல் கட்சிகளுடன் விஜய் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அந்த அரசியல் கட்சிகளுக்கு தனது ஆதரவை அவர் தெரிவிக்க இருப்பதாகவும் முன்னணி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
இன்றைய அக்டோபர் 9 தினமலர் நாளிதழில் தளபதி விஜய் அவர்களது பெயரை இரண்டு அரசியல் கட்சிகளோடு அவ்வாறு தொடர்புபடுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு வெளியிடப்படுள்ள செய்தி எள்ளளவும் அறமற்ற பொய்யான செய்தி.
தளபதி அவர்களது பெயரை உள்நோக்கத்தோடு அவரது அரசியல் நிலைப்பாடு என்று தொடர்புபடுத்தி துளியும் உண்மையில்லாத தகவல்களை கொண்டு தினமலர் நாளிதழில் வெளியாகியுள்ள இந்த பொய்யான செய்திக்கு தளபதி அவர்கள் சார்பாக அதிகாரப்பூர்வமாக மறுப்பை தெரிவித்துக்கொள்கிறேன்.!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout