கொரோனா பிரச்சனையால் 112 செய்தித்தாள் நிறுவனங்களை நிறுத்தப் போகும் தொழிலதிபர்!!! திடுக்கிடும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியாவில் செய்தித்தாள் நிறுவனங்களை கிளைப்பரப்பி இருக்கும் ஒரு பெரிய நிறுவனம்தான் The Garp Australia. இதன் நிர்வாகி ராபர் முட்டோச். கொரோனா ஊரடங்கினால் செய்தித்தாள்கள் அச்சடிப்பது முற்றிலும் தடைப் பட்டு இருக்கிறது. மேலும் பொருளாதார ரீதியில் கடுமையான வீழ்ச்சியையும் இவர் சந்தித்து இருக்கிறார். எனவே செய்தித்தாள்களை அச்சடிப்பதை கடந்த வாரம் முதலே இந்நிறுவனம் நிறுத்தி இருக்கிறது. 112 செய்தித்தாள்களும் ஒரே நேரத்தில் அச்சடிப்பதை நிறுத்தினால் எவ்வளவு பேருக்கு வேலை காலியாகும் என நினைத்துப் பார்க்கும் போதே தலையைச் சுற்றிக்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்நிலைமை தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் கூட சிறு சிறு செய்தித்தாள் நிறுவனங்கள் அதன் அச்சாக்கத்தை நிறுத்தி இருக்கின்றன.
The Garp Australia நிறுவனம் தற்போது 112 செய்தித்தாள்களை அச்சடிப்பதை நிறுத்திவிட்டு ஆஸ்திரேலியாவின் 76 பிராந்தியங்களில் இருந்து இணையத் தொடர்பு வாயிலாக செய்திகளை அனுப்ப ஆரம்பித்து இருக்கிறது. 36 செய்தி நிறுவனங்கள் முற்றிலும் அச்சாக்கத்தை நிறுத்தி இருக்கின்றன. கொரோனா ஊரடங்கினால் பழமையான செய்தி ஊடகங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. புதிய தொழில்நுட்பம், புதிய வடிவம் என்று சிலர் புதுப்பித்துக் கொண்டும் வருகின்றனர். கிராஃப் ஆஸ்திரேலியா மட்டுமல்ல 85 ஆண்டுகள் பழமை வாயந்த செய்தி நிறுவனமான ஆஸ்திரேலியா அசோசியேஷன் கூட தனது அச்சாக்கத்தை நிறுத்திவிட்டது. இதேபோல ஹேர்பர்ட் மெர்குரி, N.T News போன்ற பிரபலமான செய்தி நிறுவனங்கள் கூட தனது செயல்பாட்டை பாதியாக குறைத்து இருக்கின்றன. இதனால் வேலையிழப்பும் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா ஊடகத் துறையையும் விட்டு வைக்கவில்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக The Garp Australia இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout