4 பேர் பயணம் செய்ய ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஊரடங்கு நேரத்தில் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்து பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். நிலைமை இப்படி இருக்க ஒரு தொழிலதிபர் தனது பேரப்பிள்ளைகள் பத்திரமாக டெல்லி சென்று சேர வேண்டும் என்ற நோக்கில் ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்து இருக்கிறார். இதைத்தான் வலுத்தவனால் வாழ முடியும், இழைத்தவன் செத்து மடிய வேண்டியதுதான் என்கிறார்கள் போல...
போபாலைச் சேர்ந்த ஒரு மதுபான தொழிற்சாலையின் உரிமையாளர் தனது மகள், அவரது 2 குழந்தைகள் மற்றும் ஒரு உதவியாளரை போபாலில் இருந்து பத்திரமாக டெல்லிக்கு அழைத்து வரும் நோக்கில் 180 பயணிகள் செல்லக்கூடிய A320 ரக விமானத்தை வாடகைக்கு எடுத்து இருக்கிறார். கொரோனா நோய்த்தொற்று பீதியில் அவர் இப்படி செய்திருப்பதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்திய அரசு ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பே டெல்லியில் இருந்து போபாலுக்கு சென்றவர்கள் அங்கு 2 மாத காலமாக மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த திங்கள் கிழமை முதல் உள்நாட்டு விமானங்கள் பயணிக்க இந்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் உள்நாட்டு விமானங்களில் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விமானத்திலும் கூட கொரோனா நோய்த்தொற்று வந்துவிடலாம் என்று பயந்த தொழிலதிபர் 180 பயணச் சீட்டுகளையும் ஒட்டு மொத்தமாக ரூ.20 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார்.
அப்படி வாங்கப்பட்ட விமானத்தில் போபாலில் இருந்து நேற்று டெல்லிக்கு 4 பேர் மட்டுமே பயணம் செய்திருக்கின்றனர். இவ்வளவு விலைக் கொடுத்து விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழிலதிபரின் பெயரை வெளியிட விமான நிலைய அதிகாரிகள் மறுத்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய சாலைகள் முழுக்க தொழிலாளர்கள் நடந்தே ஊருக்குச் செல்லும் அவலத்தைப் பார்க்கும் போது இந்த விவகாரம் சற்று வெறுப்பை வரவழைக்கத் தான் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com