தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தால் இளம்பெண் மரணம். பொதுமக்களின் உயிருக்கு என்ன பாதுகாப்பு?
- IndiaGlitz, [Tuesday,May 16 2017]
போக்குவரத்து ஊழியர்கள் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை
இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க தற்காலிக ஓட்டுனர்கள், நடத்துனர்கள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது தமிழக அரசு. ஆனால் தற்காலிக ஓட்டுனர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதால் இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்
இந்த நிலையில் திருப்பூர் நட்ராஜ் திரையரங்கம் அருகே தற்காலிக ஓட்டுனர் ஓட்டிய அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த மேலும் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்கி பொதுமக்களின் உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் விரைவில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உடனடியாக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினர்களின் கருத்தாக உள்ளது.