ஆபாச வீடியோக்களை லட்சக்கணக்கில் விற்ற பஸ் கண்டக்டர்: ஏமாந்த பட்டதாரி பெண்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பட்டதாரி பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை பஸ் கண்டக்டர் ஒருவர் லட்சக்கணக்கில் விற்று பணம் சம்பாதித்த அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஜாடா என்ற 32 வயதான நபர் சமீபத்தில் ஒரு பெண்ணிடம் மிகவும் நெருக்கமாக பழகி உள்ளார். எம்ஏ பிஎட் படித்த பட்டதாரி பெண்ணான அவருக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்தபோது ஜாடா ரகசியமாக வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோவை ஆபாச இணைய தளங்களுக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து தற்செயலாக அறிந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, காவல்துறையினர் ஜாடாவை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை சுமார் 5 லட்சம் ரூபாய் ஆபாச இணையதளங்களுக்கு வீடியோ விற்றதன் மூலம் சம்பாதித்து உள்ளது தெரிய வந்தது. மேலும் அவரிடமிருந்து 62 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்ப்பிடத்தக்கது.
மேலும் ஜாடா பதிவு செய்த அனைத்து வீடியோக்களிலும் அவரது முகம் மறைக்கப்பட்டுள்ளது என்பதும் பெண்களின் முகம் மட்டும் தெளிவாக தெரியும்படி இருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் பஸ் கண்டக்டர் மீது தற்போது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com