கொரோனாவால் உயிரிழந்தவர்களை கணக்கில் காட்டாமலே கல்லறைத் தோட்டங்களில் புதைக்கப்படும் அவலம்!!!
- IndiaGlitz, [Saturday,April 04 2020]
கொரோனா பாதிப்பின் மையங்களாக ஐரோப்பிய நாடுகள் இருக்கின்றன என்று சொல்லப்படும் அளவிற்கு பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் பிரேசிலில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப் படுவதற்கு முன்பே பலர் நோய்த் தாக்கத்தால் இறந்துவிடுகின்றனர். அவர்களை நிலாபார்பசாவில் உள்ள பெரிய கல்லறைத் தோட்டங்களில் அதிகாரிகள் புதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படி பரிசோதனைக்கு முன்பாக உயிரிழப்பவர்களை அதிகாரிகள் கணக்கில் காட்டுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்நாட்டில் நாள் ஒன்றுக்கு 60 பேர் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆனால் நோய்த்தொற்று இருக்கிறதா ? இல்லையா? எனக் கண்டறிவதற்கு முன்பே பலர் நோயின்தீவிரத்தால் இறந்துவிடுகின்றனர் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலைமை நீடிக்கும் பட்சத்தில் பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை பிரேசிலில் 9216 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 365 ஆக பதிவாகியிருக்கிறது.
கணக்கில் காட்டாத ஏராளமான சடலங்கள் புதைப்பு.. pic.twitter.com/SkT8qxidhg
— Polimer News (@polimernews) April 4, 2020