5-டி20, 3-ஒருநாள் போட்டிகளில் பும்ராவிற்கு வாய்ப்பு இல்லையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடிய ஜஸ்பிரித் பும்ராவிற்கு இரண்டாது டெஸ்ட் கிரிக்கெட்டில் வாயப்பு வழங்கப் படவில்லை. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கேப்டன் விராட் கோலி அவருக்கு ஓய்வு கொடுத்து இருக்கிறோம். அகமதாபாத்தில் நடைபெற இருக்கும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் கலந்து கொள்ளுவார் எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பும்ரா விளையாட இருக்கிறார், ஆனால் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பும்ரா விளையாட மாட்டார் என்று ஐசிசி தரப்பு தகவல் வெளியிட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி தெரிவித்து உள்ளனர்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா வேகப்பந்து வீச்சில் அபாரத் திறமைக் கொண்டவர். அதோடு ஆஸ்திரேலிய தொடரின்போது பேட்டிங்கிலும் அசத்தினார். இவரது திறமையைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி வெளிப்படுத்தி இருந்தனர். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பில் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரை பும்ரா 180 ஓவர் பந்து வீசியுள்ளார் என்றும் அவரது ஃபிட்னெஸை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் போட்டிகளில் புவனேஷ்வர் குமார், ஷமி, நடராஜன், ஷைனி ஆகிய பவுலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவலும் கூறப்பட்டு வருகிறது.

More News

'வலிமை' அப்டேட் தந்த இசையமைப்பாளர் தமன்: என்ன சொன்னார் தெரியுமா?

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் பல மாதங்களாக வெளியிடாத நிலையில் இந்த அப்டேட்டை பிரதமர் முதல் முதல்வர் வரை அஜித் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

ஓவியாவின் #GobackModi டுவிட்டிற்கு இதுதான் காரணமா?

தேர்தல் நடைபெறும் நேரங்களில் திடீரென அரசியல் கட்சிகளுக்கு நடிகர்-நடிகைகள் பிரச்சாரம் செய்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகை ஓவியா பிரச்சாரம்

நடுவருடன் வாக்குவாதம்- புது நெருக்கடியில் கேப்டன் வீராட் கோலி?

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற சாதனையை நேற்று சமன் செய்தார்.

விவசாயிகள் பிரச்சனையை அடுத்து விநாயகர் பிரச்சனையில் சிக்கிய ரிஹானா!

புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது

பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சப்பட்ச தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு!

பீகாரில் 11 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தலைமை ஆசிரியருக்கு மரணத் தண்டனை வழங்கி பாட்னா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருக்கிறது.