கெத்தா புல்லட் பைக் ஓட்டும் அஜித் பட நாயகி… ரசிகர்களை கவர்ந்த வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
தல அஜித் நடிப்பில் வெளியான “வரலாறு“ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை கனிஹா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குநர் சசிகணேசன் இயக்கிய “5Star“ திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், “ஆட்டோகிராஃப்“ திரைப்படத்தின் நடிப்பிற்காகவும் மிகவும் வரவேற்கப்பட்டார்.
மதுரை பகுதியில் பிறந்து வளர்ந்த நடிகை கனிஹா தமிழில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் அதிகமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவே வலம்வந்தார். மலையாளத்தைத் தவிர தெலுங்கு, கன்னட மொழிச் சினிமாக்களிலும் இவர் ஒருசில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிப்பைத் தவிர இசை, பின்னணி பாடல் பாடுவது, பின்னணி குரல் கொடுப்பது, விளம்பரப் படங்களில் நடிப்பது என எப்போதும் பிசியாகவே இருந்த இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். தற்போது இந்த ஜோடிக்கு ஒரு மகன் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்கு பிறகு சினிமா துறையைவிட்டு ஒதுங்கியிருந்த நடிகை கனிஹா தற்போது 39 வயதான நிலையில் மீண்டும் ஒருசில திரைப்படங்களில் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். இதனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்க் அவுட் புகைப்படம் மற்றும் போட்டோ ஷுட் புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது புல்லட் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாவில் நடிகை கனிஹா வெளியிட்டு உள்ளார். ஏற்கனவே மெகானிக்கல் என்ஜிரியரிங் படித்த இவர் கெத்தா புல்லட் ஓட்டும் ஸ்டைலை பார்க்கும்போது இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் எனத் தோன்றும் அளவிற்கு தோற்றத்தில் படு இளமையாகக் காட்சித் தருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com