எலிகள் மேற்கொண்ட விண்வெளி பயணம்… காரணம் தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
விண்வெளி ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்தில் ஆண்டுகணக்கில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்கள் பூமிக்கு வரும்போது நரம்பும் சதையுமாக மட்டுமே வருகின்றனர். காரணம் எடுத்துக்கொள்ளும் உணவை பொறுத்து அவர்களின் உடல் எடை மிகவும் குறைந்து போவதாகக் கூறப்படுகிறது. இதை குறித்து ஆய்வு செய்யும் நோக்கில் சர்வதே விண்வெளி மையத்திற்கு 40 கருப்பு எலிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அப்படி அனுப்பப்பட்ட எலிகள் போகும்போது இருந்த எடையைவிட தற்போது 2 மடங்கு எடை அதிகரித்து பயில்வான்களாக மாறி வந்திருக்கும் செய்தி விண்வெளி ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் கனெக்டிக்ட்டில் உள்ள ஜாக்சன் ஆய்வகத்தில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டில் மூலம் 40 கருப்பு பெண் எலிகள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த எலிகள் சமீபத்தில் பூமிக்குத் திரும்பியதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதில் எந்தவித மருந்தும் கொடுக்காமல் அனுப்பி வைக்கப்பட்ட 24 எலிகள் 18% எடை குறைந்து இருக்கிறது. “மைட்டி மைஸ்” என்ற மருந்து கொடுக்கப்பட்ட 8 மரபணு மாற்ற எலிகள் மற்ற எலிகளைக் காட்டிலும் 2 மடங்கு எடை அதிகரித்து அதிக வலிமையுடன் திரும்பி வந்திருக்கின்றன. மேலும் “மைட்டி மைஸ்“ மருந்து கொடுக்கப்பட்ட மரபணு மாற்றம் செய்யப்படாத சாதாரண எலிகள் அதிக சதைப்போட்டு பயில்வான்களாக திரும்பி வந்திருக்கின்றன.
மேலும் பூமிக்கு திரும்பிய பின்பு எந்த மருந்தும் கொடுக்கப்படாமல் அனுப்பப்பட்ட எலிகள் சிலவற்றுக்கு மைட்டி மைஸ் மருந்து கொடுத்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. அவை சில நாட்கள் கழித்து அதிக சதையுடன் வளர்ந்து இருப்பதாகவும் தற்போது செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வின்மூலம் விண்வெளி ஆய்வு மையத்தில் நீண்டநாட்கள் தங்கியிருக்கும் வீரர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியும் என்று விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். விண்வெளி வீரர்களுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பியிருக்கும் எலிகள் குறித்த புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout