பள்ளிகளில் டிஜிட்டல் போர்டுகள், கிசான் கிரெடி கார்டு வசதி: மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
- IndiaGlitz, [Thursday,February 01 2018]
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் 2018-2019க்கான பட்ஜெட்டை தற்போது வாசித்து வருகிறார். அடுத்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தாக்கல் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்
ரயில்வே மற்றும் பொதுபட்ஜெட் இணைந்து தாக்கல் செய்யப்பட்டு வரும் இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்களை தற்போது பார்ப்போம்
பழங்குடியினரின் குழந்தைகளுக்கான கல்விக்காக ஏகலவ்யா என்ற தனித்திட்டம்
குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம்
பி.டெக் மாணவர்கள் 1000 பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்டி படிக்க உதவி
ஏழை, எளிய குடும்பங்களுக்கு மின் வசதி வழங்க ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு
கிராமப்புற வேலைவாய்ப்பு, நீர்ப்பாசன மேம்பாட்டுக்கு ரூ.14.34 லட்சம் கோடி ஒதுக்கீடு
அனைவருக்கும் வீடு திட்டத்தில் ரூ.51 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்
பள்ளிகளில் கரும்பலகைகள் அகற்றப்பட்டு டிஜிட்டல் போர்டுகள்
மீன்வளம் மற்றும் கால்நடை துறைக்கு கிசான் கிரெடிட் கார்டு வசதி
விவசாயக்கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்
ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் இரண்டு கோடி கழிப்பறைகள்
மேலும் 8 கோடி எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும்
அழுகும் காய்கறிகளை பதப்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
இன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் காரணமாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தை கண்டுள்ளது.