தனிநபர் வருமான வரி, ஜனாதிபதி சம்பள உயர்வு: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
- IndiaGlitz, [Thursday,February 01 2018]
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் இன்று காலை பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டின் ஒருசில முக்கிய அம்சங்களை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த பட்ஜெட்டின் இன்னும் ஒருசில முக்கிய அம்சங்களை பார்ப்போம்:
- தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு ரூ.2.5 லட்சம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
- 56 விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 99 நகரங்கள் தேர்வு;
- இறக்குமதி செய்யப்படும் செல்போன்களுக்கு சுங்க வரி 15ல் இருந்து 20 சதவீதமாக அதிகரிப்பு
- 5ஜி சேவை குறித்து சென்னை ஐஐடியில் ஆய்வு
- எம்.பி.க்களுக்கு படிகள் ஏப்ரலுக்கு பிறகு உயர்வு
- குடியரசு தலைவரின் சம்பளம் மாதம் ரூ.5 லட்சமாகவும், துணை குடியரசு தலைவரின் சம்பளம் ரூ.4 லட்சமாகவும் உயர்வு
- கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு
- 4000 கி.மீ நீளத்திற்கு புதிய ரயில் பாதை
- 8 கோடி ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் இணைப்பு
- ரூ.250 கோடி ஆண்டு வருவாய் உடைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு
இன்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை அடுத்து இந்திய பங்குச்சந்தையின் குறியீடுகள் உயர்ந்தன. ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்தவுடன் பங்குச்சந்தை இறக்கம் கண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் 438.79 புள்ளிகள் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.