புபோனிக் பிளேக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழப்பு!!! பரபரப்பு சம்பவங்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சீனாவின் மங்கோலியா மாகாணப் பகுதியில் ஒரு புதிய நோய்த்தொற்று பரவுவதாகச் செய்திகள் வெளியாகியது. அந்நோய்த்தொற்றை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் புபோனிக் பிளேக் நோய்த்தொற்று என உறுதிப்படுத்தினர். மேலும் இந்நோய்த்தொற்று கடந்த 2011 முதல் சீனாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது என்றும் இந்நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் 24 மணி நேரத்திலேயே உயிரிழப்பு ஏற்பட்டு விடும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து இருந்தனர். இதனால் மங்கோலியா மாகாணப் பகுதியில் புபோனிக் பிளேக் நோய்த்தொற்றுக்கு எதிராக 3 ஆம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப் பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது மங்கோலியா மாகாணத்தின் மேற்கு பகுயில் உள்ள கோவி அல்டாய் பகுதியில் 15 வயதுடைய சிறுவன் புபோனிக் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த ஜுலை 2, 3 ஆம் வாக்கில் மங்கோலியா மாகாணத்தில் உள்ள கோவட் பகுதியில் மலைக்கு ஆடு மேய்க்கச் சென்ற 27 வயதுடைய நபருக்கு முதன் முதலாக நோய் பாதிப்பு ஏற்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைத்தொடர்ந்து 17 வயதுடைய அவருடைய சகோதரருக்கும் அந்நோய் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். மேலும் இந்த 2 நபர்களைத் தவிர வேறு யாருக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்படவில்லை என்று அம்மாகாணத்தின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் புபோனிக் நோய்த்தொற்றால் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நோய்த்தொற்று மர்மோட் எனப்படும் கொறிக்கும் வகை உணவுகளை உண்ணும் மலை எலி, அணில் போன்ற விலங்குகளால் ஏற்படுகிறது என்பதையும் விஞ்ஞானிகள் எச்சரித்து இருந்தனர். முதன் முதலில் பாதிப்பு ஏற்பட்ட இருவரும் இந்த வகை இறைச்சிகளை உண்டாதாகக் கூறப்படுகிறது. எனவே மங்கோலியா மாகாணத்தில் மர்மோட் வகை உணவுகளுக்கு தடைவிதிக்கப் பட்டு இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிவரை இந்த வகை விலங்குகளை வேட்டையாடுவதற்கும் உண்பதற்கும் அம்மாகாண சுகாதாரத் துறை அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று உலகையே புரட்டி எடுத்து இருக்கும் நேரத்தில் புதிய நோய்த்தொற்று மக்களை மேலும் கடும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள இக்காலக்கட்டத்தில் இந்நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை இருக்கிறது. ஆனால் விரைவாக இந்நோய்த்தொற்றுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே காப்பாற முடியும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout