கடலில் சிக்கி தவித்த மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் காப்பாற்றிய ஹீரோ… ஊரே மெச்சும் சாதனை!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

கடலில் சிக்கி தவித்த 4 மீனவர்களை ட்ரோன் கேமரா மூலம் அடையாளம் கண்டு அவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கிறார் 19 வயது கேரள இளைஞர். இதனால் மக்கள் மத்தியில் ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமாகி விட்டார். பருவமழை காலத்தைத் தாண்டிய பிறகும் கேரளா மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் பொருளாதாரக் காரணங்களுக்காக சில மீனவர்கள் எச்சரிக்கையை மீறியும் கடலுக்குள் சென்று விடுகின்றனர். இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் நட்டிகா கடற்கரை பகுதியில் கடலுக்குள் சென்று 4 மீனவர்கள் சிக்கி கொண்டதாகத் ஊடங்களில் செய்தி வெளியாகியது. இந்த மீனவர்களை தனது ட்ரோன் கேமராவை வைத்து மீட்க முடியும் என 19 வயது தேவ் சுபில் எனும் இளைஞர் மீட்புக்குழுவிடம் கூறி இருக்கிறார்.

இதைக் கேட்ட மீட்புக்குழு, தம்பி இது விளையாட்டல்ல எனத் தெரிவித்து அனுப்பி இருக்கின்றனர். ஆனால் நட்டிகா தொகுதியின் எம்எல்ஏ கீதா கோபி இந்த விஷயத்தை கேள்விபட்டு இருக்கிறார். ஏன் அந்த இளைஞருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என நினைத்த அவர் தேவ் சுபிலை மீட்பு குழுவோடு கடலுக்குள் அனுப்பி வைத்தார். முதல் முறையாக கடலுக்குள் சென்ற தேவ் சுபில் 11 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு சென்றதும் தனது ட்ரோனை பறக்கவிட்டு இருக்கிறார்.

முதலில் கடலில் மாட்டிக்கொண்டு தவித்த ஒரு மீனவரை தேவ் தனது கேமரா மூலம் கண்டுபிடித்து இருக்கிறார். அடுத்தடுத்து மற்ற மீனவர்கள் இருக்கும் இடைத்தையும் இவர் அடையாளம் கண்டு மீட்புக்குழுவிடம் கூறி இருக்கிறார். அந்த மீனவர்களை மீட்புக்குழுவினர் உயிரோடு மீட்டு உள்ளனர். இதனால் தேவ் சுபிலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு பிடெக் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தன்னுடைய Friend request ஐ ஏற்காத முதலாளிக்கு கொலை மிரட்டல்… நெட்டிசன்களையே அதிர வைத்த சம்பவம்!!!

சோஷியல் மீடியா என்பது ஒரு தனிப்பட்ட நபரை சமூகத்தில் உள்ள மற்ற நபர்களோடு தொடர்பு படுத்திக் கொள்ள உதவுகிறது.

விஜய்யிடம் விஜய்சேதுபதி அம்மா கேட்ட ஒரே ஒரு கேள்வி!

'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பின்போது தளபதி விஜய்யை சந்தித்த நடிகர் விஜய் சேதுபதியின் அம்மா அவரிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி தற்போது வைரலாகி வருகிறது 

100% இருக்கை வாபஸ் பெற்றால்.... 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி தகவல்!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதி வழங்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டால் வரும் பொங்கல் திருநாளில் 'மாஸ்டர்' திரைப்படம் மட்டுமே வெளியாகும்

வலியில் துடித்த கர்ப்பிணியை கொட்டுப் பனியில் 12 கி.மீ தூக்கிச் சென்ற இளைஞர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

டெல்லி உட்பட பல வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மைனஸ்க்கு கீழ் பனிப்பொழிவு இருந்து வருகிறது

என்னடா இது அதிசயமா இருக்கு, எல்லாரும் ஆரியை திடீர்ன்னு புகழ்றாங்க!

பிக்பாஸ் வீட்டில் ஆரி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக சூப்பராக விளையாடி வரும் நிலையில் தற்போது ஆரியை மற்ற ஆறு போட்டியாளர்களும் குறி வைத்து உள்ளனர்