தமன்னா மீது ஷூ வீசிய மாணவர்! காரணம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,January 30 2018]

ஐதராபாத் நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகை தமன்னா மீது மாணவர் ஒருவர் ஷூ வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான தமன்னா, ஐதராபாத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் புதிய கிளையை திறந்து வைத்தார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் அதிக அளவு கூடினர்.

இந்த நிலையில் நகைக்கடையை திறந்து வைத்து ரசிகர்களை நோக்கி கையசைத்த தமன்னாவின் மீது மர்ம நபர் ஒருவர் ஷூவை வீசினார். இதனால் தமன்னாவின் பாதுகாவலர்கள் அந்த நபரை பிடித்து தாக்கினர். உடனடியாக அந்த பகுதியில் காவலுக்கு இருந்த போலீசார், அந்த நபரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் கரிமுல்லா என்றும், தமன்னா தற்போது தெலுங்கு படங்களில் அதிகம் நடிக்காததால் அவர் மீது ஷூ எறிந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் தமன்னா தற்போது 'குயீன்' ரீமேக் உள்பட மூன்று தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

தளபதி 62 படத்தின் மாஸ் அப்டேட்

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. முட்டுக்காடு பகுதியில் நடைபெற்று வரும்

தயவுசெய்து யாரும் இதை நம்பிவிட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில நாட்களாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிரான கருத்துக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆவேசமாக கூறி வருகின்றார்.

இணையத்தில் வைரலாகும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ஃபர்ஸ்ட்லுக்

ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இந்நிலையில் அவர் த ஜெய் நடித்து வரும் 'ஜருகண்டி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் விசுவாசம்: ரசிகர்களுக்கு கிடைத்த டபுள் சந்தோஷம்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கவுள்ள 'விசுவாசம்' திரைப்படத்தின் டைட்டில் கடந்த நவம்பர் மாதமே அறிவிக்கப்பட்டும், இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்து அஜித் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்

நீதிமன்ற நிகழ்வுகளை நித்யானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அப்டேட் செய்த சீடர் கைது: நீதிபதி அதிரடி

சென்னை ஐகோர்ட்டில் இன்று நித்யானந்தா குறித்த வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டிருந்தபோது நித்தியானந்தாவின் சீடர் நரேந்திரன் என்பவர் நித்தியானந்தாவுக்கு வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது அப்டேட் செய்ததை